Shri.J.T.Venkateswarlu, DPS, Chennai City Region assumed the charge of PMG, Central Region on promotion.
திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் பொறுப்பேற்பு
திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவராக ஜெ.டி. வெங்கடேஸ்வரலு வியாழக்கிழமை பொறுபேற்றுக்கொண்டார்.
திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவராக இருந்த பகதூர்சிங் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு புதன்கிழமை சென்றார். இதனையடுத்து சென்னையில் அஞ்சல்துறை இயக்குநராக பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த ஜெ.டி. வெங்கடேஸ்வரலு பணி உயர்வு பெற்று திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் வியாழக்கிழமை திருச்சி தலைமைத் தபால் நிலைய வளாகத்தில் உள்ள அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பிற அதிகாரிகளும், ஊழியர்களும் வெங்கடேஸ்வரலுக்கு வாழ்த்துக் கூறினர். திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திரவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இவர் அஞ்சல்துறை தலைமை அதிகாரியாவார். கடந்த 1994-ம் ஆண்டு இவர் இந்திய அஞ்சல்துறை பணிகளுக்கு (ஐ.பி.எஸ்) தேர்வு செய்யப்பட்டார்.
source: Dinamani.
source: Dinamani.
No comments:
Post a Comment