இந்தியாவில்
வாட்ஸ்அப் பயனாளர்கள் ஏழு
கோடி!
வாட்ஸ் அப் -பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஸ்மார்ட்போன் வாங்க ஆரம்பித்திருப்பவர்கள் ஏராளம். ஃபேஸ்புக் போல பிஸினஸ் பக்கங்கள் இல்லை என்பது இதன் குறையாக இருந்தாலும், இன்றைய நிலையில் இந்த வாட்ஸ் அப்பை அனைத்து துறையினர்களும் அவரவர்களின் தேவைக்கு தக்கபடி பயன்படுத்தி வருகிறார்கள்.
அதனால், இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்றைய நிலையில் இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை ஏழு கோடியாக உயர்ந்துள்ளது என அந்த நிறுவனத்தின் வர்த்தக பிரிவின் தலைவர் நீரஜ் அரோரா தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர், சர்வதேச அளவில் இந்த சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையைக் காட்டிலும் இது அதிகம் எனவும், இந்தியாவில் எங்களின் வாடிக்கையாளர்களாக உள்ள ஏழு கோடி பேரில் மாதத்துக்கு ஒருமுறையாவது பயன்படுத்துவோரும் இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் நிறுவனத்தை சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் 1.16 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது நாம் எல்லோரும் அறிந்ததே. அப்போது இந்தியாவில் வாட்ஸ்அப் பயனாளர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு கோடியாக இருந்தது. இது இப்போது 7
கோடியாக உயர்ந்துள்ளது.
தனது பயணிக்கும் பாதையில் சாதனைகளை படைத்து வரும் இந்த நிறுவனத்தில் மொத்தம் 80 பணியாளர்கள்தான் உள்ளனர் என்பது சுவாரஸ்யமான தகவல்.
No comments:
Post a Comment