dob

தமிழில் முதல் மார்க் வாங்கிய ஹரியானா இளைஞர்கள்! - அஞ்சலகத் தேர்வில் அதிர்ச்சி

 

‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்ற கோஷம் தமிழ்நாட்டுக்குப் புதுசு இல்லை. ஆனால், இத்தனை ஆண்டுகள் கடந்தும் இந்த நிலைமை மத்திய அரசுப் பணி நியமனங்களில் தொடர்வதுதான் வேதனை. அஞ்சலகத் தேர்வில், தமிழகத்தில் இருக்கும் காலியிடங்களை வட இந்தியர்களே ஆக்கிரமிக் கிறார்கள் என்ற சர்ச்சை லேட்டஸ்ட்டாக எழுந்திருக்கிறது.
தமிழகத்தில் 44 அஞ்சலகக் கோட்டங்களில் காலியாக இருக்கும் 310 அஞ்சலகப் பணியாளர் களுக்கான (போஸ்ட்மேன்) தேர்வு, கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுக்க பலரும் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் மார்ச் 14-ம் தேதி அஞ்சலகத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.  ஹரியானா மாநிலம் தவிர மற்ற மாநிலங்களிலிருந்து தேர்வு எழுதிய எவரும் இந்தப் பணிக்குத் தேர்வுசெய்யப்படவில்லை. 

கணக்கு, பொது அறிவு, ஆங்கிலம், தமிழ் என ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் 25 வீதம் மொத்தம் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால், தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட நம்மவர்களே தமிழில் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருக்கும்போது, தமிழே அறியாத ஹரியானா மாநில இளைஞர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றிருப்பதுதான்!  

இந்தத் தேர்வில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து பல்வேறு ஆதாரங்களைத் திரட்டியுள்ள தமிழக மாணவர்கள், மதுரை கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளனர். அவர்களிடம் பேசினோம். “தமிழ் இலக்கணத் தேர்வில் தமிழ் படித்த நாங்களே 25-க்கு 18 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கமுடியவில்லை. ஆனால், ஹரியானா மாணவர்கள் 23, 24 என எடுத்திருக்கிறார்கள். இதில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் வந்தது. தேர்வு செய்யப்பட்டுள்ள வட மாநில மாணவர்களின் செல்போன் எண்களை இணையதளத்திலிருந்து எடுத்து, அவர்களில் சிலரிடம் பேசினோம். அவர்களுக்கு இந்தியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. ஆங்கிலம்கூட தெரியவில்லை. ‘தமிழ் நஹி மாலும்’ என்றுதான் கூறுகிறார்கள். அவர்கள் எப்படி தமிழில் இவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க முடியும்?

முறைகேடாக ஆட்கள் தேர்வு நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழோ, ஆங்கிலமோ தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் போஸ்ட்மேன் வேலையை எப்படிப் பார்ப்பார்கள்? அஞ்சலகத் துறையின் இணையதளத்திலிருந்து நாங்கள் இப்படித் தகவல்கள் எடுப்பது தெரிந்ததால், திடீரென அந்த இணையப் பக்கத்தை முடக்கிவிட்டார்கள். இதை நாங்கள் விடப்போவதில்லை. சி.பி.ஐ விசாரணை கேட்டு நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்” என்றனர். 

மயிலாடுதுறையைச் சேர்ந்த ரவிசங்கர், “என் மகன் கடுமையாக உழைத்து மிகச் சிறப்பாகத் தேர்வு எழுதினான். அவனுக்கு 71 மதிப்பெண்கள் தான் கொடுத்திருக்கிறார்கள். 44 கோட்டங்களிலும் முதல் இரண்டு இடங்களிலும் ஹரியானா மாணவர்கள் மட்டுமே தேர்வாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்கூட்டியே வினாத்தாள் வழங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. அவர்களில் பலரும் பத்தாம் வகுப்பில் 40 சதவிகித மதிப்பெண்கள்தான் பெற்றிருக்கிறார்கள். இதில் மட்டும் அவர்களால் எப்படி இவ்வளவு மார்க் வாங்க முடிந்தது? அஞ்சலகத் தேர்வுத் துறையைக் கண்டித்து, மத்திய, மாநில அரசுகளுக்குப் புகார் அனுப்பியிருக்கிறேன்” என்றார் வருத்தத்துடன்.


குறுக்கு வழியில் தகுதியற்றவர்களை மத்திய அரசுப் பணியில் புகுத்தும் இந்த முயற்சி தடுக்கப்பட வேண்டும். 


ஜி.மெயிலின் புதிய வசதியை தெரிந்து கொள்ளுங்கள்

ஜி.மெயில் மூலம் அனுப்பும் வீடியோக்களை இனிமேல் டவுன்லோடு செய்யாமல் அப்படியே பார்க்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் இளைஞர்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் ஜி.மெயிலும் முக்கியமான ஒரு பயன்பாட்டு இணையமாகவே இருந்து வருகிறது. இளைஞர்களுக்கு அலுவலகம், படிப்பு, வேலை முதலான இடங்களில் வீட்டு முகவரி, போன் நம்பரை அடுத்து இணைய முகவரியும் கட்டாயமான ஒன்றாக உள்ளது. இணையமுகவரியில் ஜி.மெயில் முகவரிதான் பெரும்பாலானவர்கள் தேர்வாகவும் உள்ளது. ஜி.மெயில் மூலம் டாக்குமென்ஸ் எனப்படும் எழுத்து சார்ந்த ஆவணங்கள் அதிகமாக அனுப்பப்பட்டாலும், ஜி.மெயில் மூலமாக போட்டோவும், வீடியோவும் அனுப்பும் தேவையும் உள்ளது. இதுவரையில் ஜி.மெயில் மூலம் அனுப்பப்படும் வீடியோக்களை டவுன்லோடு செய்தால் மட்டுமே அதனைப் பார்க்க முடியும்.
தற்போது, டவுன்லோடு செய்யாமலே பார்க்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கணினியின் ஹார்ட் டிஸ்கில் உள்ள மெமரி பாதுகாக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், எளிதாகவும் வீடியோவைப் பார்க்க முடியும். டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் 25 MB-க்கு குறைவான மெமரி கொண்டிருக்கும் வீடியோக்களை மட்டுமே இப்படி பார்க்க முடியும். இந்த சேவை 15 நாள்களுக்குள் அறிமுகமாகிவிடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post offices to start selling pulses at subsidised rates

அத்தியாவசிய உணவு தானியங்கள் இனி தபால் நிலையங்களில் விற்பனை


மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய உணவு தானியங்களை தபால் நிலையங்களில், மானிய விலையில் விற்பனை செய்ய, டெல்லியில் நுகர்வோர் விவகார செயலாளர்  ஹெம் பாண்டே தலைமையில் நடைபெற்ற  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அத்துடன், பண்டிகை காலங்களில் கையிருப்பில் உள்ள பருப்பு வகைகளை அதிக அளவில் இருப்பு வைக்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 
இதற்காக நாடு முழுவதும் 500 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து தானியங்கள் கொள்முதல் செய்யப்பட இருப்பதாகவும், இந்த தானியங்களுக்கான பணம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உடனுக்குடன் வரவு வைக்கப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள், வேளாண்மை, உணவுத்துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
NEW DELHI: After delivering Ganga jal, post offices will now start selling pulses at subsidised rates to consumers. Finding a solution to the lukewarm response of states in picking up pulses from the central buffer stock, the Centre has decided to roll out this initiative in the next couple of weeks.

"We have already talked to the postal department and they are keen to start this. To make a beginning, we will start selling chana dal at subsidised prices at some of the post offices since it's still selling at relatively high price," consumer affairs secretary Hem Pande told TOI.

An official release of consumer affairs ministry said the inter-ministerial panel while reviewing the availability and prices of essential commodities on Friday had suggested that in the absence of government outlets in states, postal networks should be tapped for distribution.

TOI had reported on September 3 that the consumer affairs ministry was exploring the possibility of using the huge network of India Post outlets across the country.


Pande said in the next few days they will work out how pulses in packets can be made available at post offices. "We will see whether our entities can do this. Already one agency, NCCF (National Cooperative Consumers Federation of India), is selling pulses in Delhi through mobile vans," he added.


Early this year, the Centre had struggled to dispose off imported pulses since states did not come forward to take them despite government offering the stock at subsidised prices. This year, the buffer stock created with import and domestic procurement of pulses is more than 1.5 lakh tonnes and the Centre is in a comfortable position to start their sale through different government outlets.
5 Delhi Hospitals Fined Rs. 700 Crore For Refusing Free Treatment To Poor
Image result for multi speciality hospitalsImage result for max super multi speciality hospitals
ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கு ரூ.600 கோடி அபராதம்
The Delhi government has asked five private hospitals in the city, including Fortis Escorts Heart Institute and Max Super Specialty Hospital (Saket), to deposit "unwarranted profits" of over Rs. 700 crore for refusing free treatment to the poor, the prime condition for land allotment lease.

Dr Hem Prakash, additional director (EWS) in the Health Department, said these five hospitals -- Max Super Specialty Hospital (Saket), Fortis Escorts Heart Institute, Shanti Mukand Hospital, Dharamshila Cancer Hospital and Pushpawati Singhania Research Institute -- were provided lands at concessional rates between 1960 and 1990 on the condition that they will treat the poor free of cost.

"These five hospitals have not abide by the conditions. We had earlier in December 2015, sent notices to these hospitals seeking their explanation as to why they failed to treat the poor and why they should not be fined. But none of them gave satisfactory replies so we initiated action against them," said Dr Prakash.

"The penalty has been imposed on the basis of a High Court order passed in 2007 on a PIL demanding implementation of the provision of free treatment to poor and action against the erring hospitals. And the fine amount has been calculated accordingly," he said.

The hospitals have been asked to pay the amount by July 9, failing which further action will be initiated against them.

Total 43 private hospitals in Delhi were allotted land at concessional rates on the condition that they will keep 10 per cent of their in-patient department capacity and 25 per cent of out-patient department capacity to treat EWS patients free of cost.

Fortis Healthcare's subsidiary Escort Heart Institute and Research Centre has received an order to deposit 
Rs. 503.36 crore for non-compliance of conditions of land allotment lease.

"The management will challenge the same in the High Court of Delhi or such relevant authority to seek suitable legal remedies available to it under law," the hospital said in a statement.

Devki Devi Foundation, of which Max-Super Speciality Hospital in Saket is a unit, said, "We believe the order is unfair to us, we stand fully committed to discharging all our obligations towards economically weaker sections (EWS). We are extremely serious towards fulfilling our obligations. While we study the order in detail, we will prefer an appeal against this order in the appropriate forum."

Director of Dharamshila Cancer Hospital Suversha Khanna said they will challenge the order in the court. Pushpawati Singhania Research Institute and Shanti Mukand Hospital could not be contacted.
    ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்காத, ஐந்து தனியார் மருத்துவமனைகளுக்கு, 600 கோடி ரூபாய் அபராதத்தை, டில்லி அரசு விதித்துள்ளது.


டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு உள்ளது. இங்கு செயல்பட்டு வரும், ஐந்து தனியார் மருத்துவமனைகளுக்கு, டில்லி அரசு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, டில்லி சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குனர் டாக்டர் ஹேம் பிரகாஷ் கூறியதாவது: டில்லியில், 43 தனியார் மருத்துவமனைகளுக்கு, சில நிபந்தனைகளுடன் மிகவும் குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1960 முதல், 1990 வரை அளிக்கப்பட்ட இந்த அனுமதியின்படி, இந்த மருத்துவமனைகளில் உள் நோயாளிகளில், 10 சதவீதம், புறநோயாளிகளில், 25 சதவீதம், ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஆனால் இந்த விதிகளை மீறி, ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காத இந்த மருத்துவமனைகளுக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் திருப்தியளிக்காததால், 600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை, அடுத்த மாதம், 9ம் தேதிக்குள் அவர்கள் செலுத்தாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த, 2007ல், டில்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த அபராதம் கணக்கிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எந்தெந்த மருத்துவமனை?
டில்லி அரசின் இந்த உத்தரவின்படி, போர்டிஸ் எஸ்கார்ட்ஸ் இதய சிகிச்சை மையத்துக்கு, 503.36 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதைத் தவிர, மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சாந்தி முகுந்த் மருத்துவமனை, தரம்ஷிலா புற்றுநோய் மருத்துவமனை, புஷ்பாவதி சிங்கானா ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டில்லி அரசின் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதாக இந்த மருத்துவமனைகள் தெரிவித்து உள்ளன.


பிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி?
கடந்த ஆண்டு இதே நேரத்தில் மக்கள் மத்தியில் சுடச்சுட பேசப்பட்டு வந்த விஷயம்பிரதான் மந்த்ரி சுரக்ஷா பீமா யோஜனா’ (தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி) மற்றும்பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ (ஆயுள் காப்பீட்டு பாலிசி) என்கிற மத்திய அரசின் இரண்டு இன்ஷூரன்ஸ் திட்டங்கள்தான். 

கடந்த ஓராண்டு காலத்தில் இந்தத் திட்டங்கள் எப்படி செயல்பட்டன, இதுவரை இந்த பாலிசியின் மூலம் எத்தனை பேருக்கு க்ளெய்ம் தரப்பட்டிருக் கிறது, எத்தனை பேர் இந்த  திட்டத்தில் இணைந்திருக் கிறார்கள், புதிதாக இன்ஷூரன்ஸ் எடுக்க விரும்புபவர்களை இந்த திட்டத் தில் இணைக்கிறார்களா என்கிற கேள்விகளுக்குப் பதிலை தெரிந்து கொள்ளும்முன் இந்தத் திட்டங் களில் இதுவரை எத்தனை பேர் சேர்ந்து பயன் அடைந்திருக்கிறார்கள்       என்பதைப் பார்ப்போம். 

எத்தனை பேர்? 

கடந்த 29 ஏப்ரல் 2016 நிலவரப்படி, பிரதான் மந்த்ரி சுரக்ஷா பீமா யோஜனா (பி.எம்.எஸ்.பி.வொய்) திட்டத்தின் கீழ் 9,42,28,483 பேர் இணைந்து இருக்கிறார்கள். பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (பி.எம்.ஜே.ஜே.பி.வொய்) திட்டத்தின் கீழ் 2,95,96,415 பேர் இணைந்திருக்கிறார்கள். 

கலக்கும் க்ளெய்ம்கள்!

கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி வரையில், பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் மூலம் இதுவரை 23,798 பேர் இழப்பீடு (க்ளெய்ம்) கோரினார்கள்.
அதில் 21,385 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாக அரசு வலைதளங்கள் சொல்கின்றன. இதில் அதிகபட்சமாக எல்..சி நிறுவனம் 8,345 பேருக்கும், எஸ்.பி. லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் 7,430 பேருக்கும் இழப்பீடு வழங்கி இருக்கின்றன. 364 பேருக்கு மட்டுமே இழப்பீடு  நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இது இழப்பீடு கோரிய மொத்த நபர்களில் வெறும் 1.53% என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பிரதான் மந்த்ரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் மொத்தம் 4,950 நபர்கள் இழப்பீடு கோரி இருக்கின்றனர். அதில் 3,277 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது. இழப்பீடு கோரிய மொத்த நபர்களில் 807 பேருக்கு (இது மொத்த நபர்களில் 16.30%) இழப்பீடு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.  866 பேருடைய இழப்பீட்டுக் கோரிக்கைகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. 

பி.எம்.எஸ்.பி.வொய் திட்டத்துக்கு அதிகபட்சமாக யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் 926 இழப்பீடுகளையும், நேஷனல் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் 803 இழப்பீடுகளையும், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் 791 இழப்பீடுகளையும் வழங்கி இருக்கின்றன.
ரெனீவல் பிரீமியம்! 

பிரதான் மந்த்ரி சுரக்ஷா பீமா யோஜனா (பி.எம்.எஸ்.பி.வொய்) திட்டத்துக்கு ஆண்டு பிரீமியமாக 12 ரூபாய், மே மாதம் 31-ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்போ நம் வங்கிக் கணக்கிலிருந்து (எந்த வங்கிக் கணக்கு மூலமாக இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்தோமோ அந்த வங்கிக் கணக்கு) ஆட்டோ டெபிட் முறையில் வசூலிக்கப்படும். அதற்கான நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்.களை வங்கிகள் இப்போது அனுப்பத் தொடங்கிவிட்டன. 

அதேபோல் பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்துக்கு ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும். அந்த தொகையும் மேற்கூறியது போலவே மே 31-ம் தேதி அல்லது அதற்கு முன்பே நம் வங்கிக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் முறையில் வசூலிக்கப்படும். எனவே, இந்த இரண்டு பிரீமியத்துக்குத் தேவையான (330+12) 342 ரூபாயை இந்த இரண்டு பாலிசிகளையும் எடுத்தவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருப்பது அவசியம். 

புதிய நபர்கள் இணைப்பு!

பெரும்பாலான அரசு வங்கிகளில் இதற்கென்றே தனியாக ஆட்களை வைத்து நிர்வகித்து வருகிறார்கள். புதிதாக வருபவர்களையும் இதில் சேர்த்தும் வருகிறார்கள். சில கிராமபுறப் பகுதிகளில் குறைவான ஆட்கள் பணிபுரியும் வங்கிக் கிளைகளில் இந்த திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமல், சாதாரண வங்கிப் பணிகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதாக மக்களிடமிருந்து புகார் வருகிறது. 

சில வங்கிகளில் இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியாமல் பல அதிகாரிகள் இருக்கின்றனர். இந்தத் திட்டம் கடந்த ஆண்டுடன் முடிந்துவிட்டதா கவும் சொல்கிறார்கள். ஆனால், இந்தத் திட்டம் இப்போதும் செயல்பாட்டில் இருப்பதால், வங்கி அதிகாரிகளை வற்புறுத்தி இந்தத் திட்டத்தில் சேர ஒவ்வொருவரும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
புதிதாக சேருபவர்கள் கவனிக்க! 

1.
இந்த பாலிசிகளில் சேருவதற்கு எந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கி றீர்களோ, அந்த வங்கிக் கிளையைதான் அணுக வேண்டும்.

2.
வங்கிக் கணக்கு எண், மின்னஞ்சல் முகவரி, ஏதாவது ஒரு அடையாளச் சான்று, முகவரிச் சான்று, ஆதார் (இருந்தால்), மொபைல் எண் போன்றவைகளை கட்டாயம் எடுத்துச் செல்லவும்.

3.
எந்த திட்டத்தில் சேர இருக்கிறோமோ, அந்த  திட்டத்துக்குரிய  விண்ணப்பத்தையும் நாமே பிரின்ட் அவுட் எடுத்துக் கொண்டு வங்கிக்குச் செல்வது நல்லது. பல வங்கிகளில் பிரின்டர் வேலை செய்யவில்லை, மின்சாரம் இல்லை, பிரின்டரில் டோனர் தீர்ந்துவிட்டது என்று சொல்லி நம்மை அலையவிடலாம். 

4.
யாரை நாமினியாக நியமிக்க வேண்டும், நாமினி மைனராக இருக்கும்பட்சத்தில் மைனருக்கு யாரை காப்பாளராக நியமிக்க வேண்டும் என்பது போன்ற அதிமுக்கியமான விஷயங்களை வங்கிக்கு செல்வதற்குமுன்பே தீர்மானித்துக் கொண்டு செல்லவும்.

5.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணைபவர் 18 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்கவேண்டும். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் இணைபவர்கள் 18 - 70 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 70 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். மேற்கூறிய திட்டங்களுக்கான, வயது வரம்பை பூர்த்தி செய்தவர்கள் எப்போது வேண்டுமானாலும், திட்டங்களில் இணையலாம்.

இந்த பாலிசிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியிடம் சமர்பித்தபின், அடுத்த இரண்டு அல்லது மூன்று வேலை நாட்களுக்குள் வங்கிக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் முறையில் முதல் வருட பிரீமியம் வசூலிக்கப்படும். பிரீமியம் வசூலிக்கப்பட்டதற் கான எஸ்.எம்.எஸ், நாம் வங்கியிடம் கொடுத்திருக்கும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். கூடவே, ஒரு அத்தாட்சி ஸ்லிப்பும் வழங்கப் படும். அதையும் கட்டாயம் வாங்கிக் கொள்வது அவசியம். இந்்த அத்தாட்சிக் கடிதம்தான் நாம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் சேர்ந்ததற்கான சான்று. அதோடு இந்த அத்தாட்சிக் கடிதம்தான் பாலிசிதாரரின் இன்ஷூரன்ஸ் சான்றிதழாகவும் கருதப்படும்.

குறைந்த பிரீமியத்தில் இழப்பீடு கிடைக்கும் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எல்லோரும் எடுத்துக் கொள்வது அவசியம். அதைவிட அவசியம், இந்த பாலிசியை எடுத்தபின், அது தொடர்பான விவரங்களை யும் நாமினி பற்றிய குறிப்புகளையும் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியப் படுத்துவது. செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா?
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய:

* PMSBY   http://jansuraksha.gov.in/Files/PMSBY/English/ApplicationForm.pdf#zoom=250

* PMJJBY  http://jansuraksha.gov.in/Files/PMJJBY/English/ApplicationForm.pdf#zoom=250 

ஆயுள் காப்பீட்டு பாலிசியில் இழப்பீடு கோரும்போது!

பி.எம்.ஜெ.ஜெ.வொய். திட்டத்தில் எளிமையாக க்ளெய்ம் பெறுவது எப்படி எனறு எல்..சி வட்டாரத்தில் விசாரித்தோம்.

‘‘
க்ளெய்ம் கோரும்போது இறப்புச் சான்றிதழ், இறந்தவரின் வங்கி பாஸ்புக் அல்லது திட்டத்துக்கு 330 ரூபாய் செலுத்தியதற்கான வங்கி ஆதாரம், (எஸ்.எம்.எஸ்.கூட எடுத்துக் கொள்ளலாம்), நாமினி மூலம் விண்ணப்பித்து கையெழுத்திட்ட இழப்பீட்டுப் படிவம், நாமினியின் வங்கிக் கணக்கு விவரங்கள், நாமினியின் வங்கிக் கணக்கு விவரங்களை உறுதிப்படுத்தும் விதத்தில் நாமினியின் வங்கி பாஸ்புக் அல்லது ரத்து செய்யப்பட்ட ஒரு காசோலையை கட்டாயம் இணைக்கவும். இறந்தவர் மற்றும் நாமினியின் ஆதார் அட்டை இருந்தால், அதையும் கட்டாயம் இழப்பீட்டுப் படிவத்துடன் இணைக்கவும்.

மேற்கூறியவை எல்லாம் இணைத்து எந்த வங்கியில் இன்ஷூரன்ஸ் எடுத்தோமோ, அதே வங்கிக் கிளையில் இவைகளை சமர்ப்பித்தால் போதும். க்ளெய்ம் தொகை சம்பந்தப்பட்ட நாமினியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.’’

தனிநபர் காப்பீட்டு பாலிசியில் இழப்பீடு கோரும்போது!

பி.எம்.எஸ்.பி.வொய் திட்டத்தில் எளிமையாக க்ளெய்ம் பெறுவது  எப்படி ?
விபத்து நடந்து நிரந்தர ஊனம் ஏற்பட்டிருந்தால் விபத்து ஏற்பட்டதற்கான எஃப்..ஆர், பாலிசிதாரர் கையெழுத்திட்ட விண்ணப்பம், ஒருவேளை கைகள் பாதிப்புக்குள்ளாகி இருந்தால் கெஸட்டட் அதிகாரிகள் முன்னிலையில் பாலிசிதாரர் கைரேகை வைத்துக் கொள்ளலாம். வேறு விதமான விபத்தின் தன்மையைப் பொறுத்து பஞ்சநாமா மற்றும் எஃப்..ஆர் தேவைப்படும். இழப்பீடு கோருபவரிடம் ஆதார் விவரங்கள் இருந்தால், கட்டாயமாக வங்கியிடம் சமர்பிக்கவும். 

இதுவே பாலிசிதாரர் இறந்துவிட்டால், அதற்கான இறப்புச் சான்றிதழ், எஃப்..ஆர் விவரம், நாமினி பூர்த்தி செய்து கையெழுத்திட்ட இழப்பீட்டுப்  படிவம், நாமினியின் வங்கி விவரங்கள் மற்றும் அதை உறுதிப்படுத்தும் பாஸ்புக் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை போன்றவைகளை இணைத்து வங்கியிடம் சமர்பித்தாலே போதுமானது. வங்கி, இந்த விவரங்களை எல்லாம் உறுதிப்படுத்திவிட்டு, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் கொடுக்கும். அதன் பிறகு அடுத்த 7 - 15 நாட்களுக்குள் இழப்பீட்டை பரிசீலித்து பாலிசிதாரர் அல்லது நாமினிக்கு வழங்கப்படும்.