dob

சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை!
Government likely to ban sale of loose cigarettes, Rs 20000 fine for smoking in public
The government is considering a proposal to ban the sale of loose cigarettes, a move that will hit ITC and other cigarette makers hard as 70 per cent of retail takes place in this form.
This is one of the many measures proposed by an expert panel set up by the health ministry. Other suggestions include raising the age limit for consumption and increasing the fine for smoking in public spaces to Rs 20,000 from Rs 200, apart from making this a cognizable offence.
பெட்டி கடைகளில், சிகரெட்டை சில்லரையாக விற்பதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட புகையிலை தொடர்பான கடுமையான கொள்கைகளை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல் வெளியானதை தொடர்ந்து பங்குச் சந்தையில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சடசடவென சரிந்தது. 

நாட்டில் புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை குறைப்பதற்கான பரிந்துரைகளை தெரிவிக்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு தற்போது தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. 

அதில், கடைகளில் சிகரெட்டை ஒன்று, இரண்டு என எண்ணிக்கை கணக்கில் சில்லரையாக விற்பதற்கு தடை விதிக்க வேண்டும்; புகையிலை தயாரிப்பு பொருட்களை விற்பதற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது வரம்பை அதிகரிக்க வேண்டும்; சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களுக்கான 2003 ஆண்டு சட்டத்தின் சில விதிகளை மீறுவோருக்கான அபராத தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளை தெரிவிப்பதற்கான வரைவு குறிப்பு அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் அனுப்பப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நத்தா, மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார். 

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கான மேற்கூறிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டால், அது இந்திய புகையிலை பொருட்கள் தயாரிப்பு துறையில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியர்கள் 100 பில்லியன் சிகரெட்டை புகைத்ததாக ஈரோமானிட்டர் இண்டர்நேஷனல் என்ற அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிக்கிறது. இவ்வாறு விற்கப்பட்ட சிகரெட்டுகளில் பெரும்பாலானவை பெட்டி கடைகளில் சில்லரையாகத்தான் விற்கப்பட்டுள்ளது. 

தற்போது ஒரு பில்டர் சிகரெட்டின் விலை 8 முதல் 10 ரூபாய் அளவுக்கு விற்கப்படும் நிலையில், சிகரெட்புகைக்கும் எண்ணம் தோன்றினால், உடனே 10 ரூபாயை கொடுத்து வாங்கி புகைக்கிறார்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ஆனால் அதனையே சில்லரையாக விற்கக்கூடாது; பாக்கெட்டாகத்தான் விற்க வேண்டும் என்றால் 10 சிகரெட்டுகள் அடங்கிய பாக்கெட்டை 100 ரூபாய் மொத்தமாக கொடுத்து வாங்க வேண்டும்
ஒரு சில பிராண்ட்  சிகரெட்டுகள் 20 எண்ணிக்கை கொண்ட பாக்கெட்டாகத்தான் விற்கப்படுகிறது. அத்தகைய பிராண்ட் சிகரெட்டுகளை வாங்க வேண்டுமானால் 200 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும். இவ்வாறு மொத்தமாக 100, 200 என விலை கொடுத்து வாங்க பலருக்கு இயலாது. சிலர் அந்த அளவுக்கு கொடுத்து சிகரெட் வாங்க வேண்டுமா என யோசித்து சிகரெட் புகைக்கும் எண்ணத்தை கைவிட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற காரணங்களால் சிகரெட் விற்பனையும், சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும். 

அரசும் அதனைத்தான் விரும்புகிறது. ஏனெனில் சமீப காலமாகவே சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவோர்களுக்கு வாய், நுரையீரல் உள்ளிட்ட இடங்களில் புற்று நோய் வருவது அதிகரித்துள்ளது. பொது இடங்களில் புகைபிடித்தால் அபராதம், மெல்லும் புகையிலை விற்பதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தபோதிலும், அது போதிய பயனளிக்கவில்லை 

இந்நிலையிலேயே மேற்கூறிய பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. புகையிலை பொருட்கள் தயாரிப்பு துறை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 25,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது என்றபோதிலும், அரசு அதனை பொருட்படுத்தவில்லை. 

இதனிடையே புகையிலை பொருட்கள் மீதான அரசின் கடுமையான கொள்கைகள் அமலாகப்போகிறது என்ற தகவல் வெளியானவுடன், மும்பை பங்குச் சந்தையில் இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி-யின் பங்கு மதிப்பு இன்று சுமார் 5 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இதேப்போன்று காட்ஃப்ரே பிலிப்ஸ், கோல்டன் டொபாக்கோ மற்றும் விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் முறையே 5, 6 மற்றும் 3.6 சதவீதம் என வீழ்ச்சியடைந்தது.


No comments:

Post a Comment