dob

வங்கி கணக்கு விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப கட்டணம்!


 கணக்கு விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வங்கிகள் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளன.

வங்கிகளில் சேமிப்பு கணக்கு உள்பட அனைத்து வகையான கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கும் பண பரிமாற்றம் நடை பெறும்போது எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வருவது நடைமுறையில் உள்ளது. சில வங்கிகள், வாரம் ஒருமுறை கணக்கின் இருப்பு தொகை பற்றியும் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவித்து வருகின்றன. இதுநாள் வரை இந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வங்கிகள் அளித்து வருகின்றன.

இந்நிலையில், வருகின்ற 1 ஆம் தேதி முதல் இந்த சேவைக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் சேவை என்ற அடிப்படையில் ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு 50 பைசா வசூலிக்கப்படும். நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 3 மாதங்களுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்படும் என்று தனியார் வங்கிகள் அறிவித்துள்ளது.

பொதுத் துறை வங்கிகளில் ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு விதமான கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. எஸ்.எம்.எஸ். எண்ணிக்கையை கணக்கிடாமல் வருடத்திற்கு 100 ரூபாய் வசூலிக்கப்படும் என்று கனரா பாங்கி அறிவித்துள்ளது. எஸ்.எம்.எஸ். சேவை தேவை இல்லை என்று வாடிக்கையாளர் கருதினால் விண்ணப்பம் மூலம் எழுதி கொடுத்தால் எஸ்.எம்.எஸ். சேவை நிறுத்தப்பட்டுவிடும்.


S .அருள்செல்வன்,
பட்டுகோட்டை.
098428 10999

No comments:

Post a Comment