dob

350 post offices in all over the nation is all set to launch passport services from 22.09.2014.
தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை தொடக்கம்



நாடு முழுவதும் தபால் நிலையங்களில் நாளை முதல் பாஸ்போர்ட் சேவை தொடங்குகிறது. இந்தியா முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 979 தபால் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தபால் துறையின் வருமானத்தை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

தபால் துறையின் வருமானத்தை அதிகரிக்க மின் கட்டண வசூல், சோலார் விளக்கு, மற்றும் மினி பிரிட்ஜ், ரயில், விமான டிக்கெட் முன்பதிவு, உடனடி மணியார்டர், செல்போன் மூலம் பண பரிவர்த்தனை போன்ற பல சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கம்யூட்டர் வசதி உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இ போஸ்ட் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் புதிய திட்டங்களில் தொடர்ச்சியாக 22ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் ஆன்லைன் சேவை துவங்கப்பட உள்ளது.


S.அருள்செல்வன் 
செயலர் NAPE P 3
பட்டுகோட்டை 

No comments:

Post a Comment