dob

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 22 லட்சம் பேருக்கு நோட்டீஸ்!
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத சுமார் 22 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருவதாக வருமான வரித் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத் தவறுவோருக்கு எதிரான பிரசாரத்தை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. அதன்படி, கணக்கு தாக்கல் செய்யாத சுமார் 22 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருவதாக வருமான வரித் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் தாக்கல் செய்வதற்கு அவகாசம் அளித்தும் பிரசாரம் நடைபெறுவதாக அவர்கள் கூறியுள்ளனர். அதோடு, அதிக வருமானம் ஈட்டுவோரில் கணக்கு தாக்கல் செய்யாதவர்களை கணக்கெடுத்து அவர்கள் மீது வழக்கு தொடரவும் வருமான வரித் துறை தயாராகி வருகிறது. 2013-14ஆம் நிதி ஆண்டில் மட்டும் 641 பேர் மீது வழக்கு தொடரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுவாக மாதச் சம்பளம் பெறுவோர், வருமான வரிக் கணக்கை ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வில்லையென்றால் காலதாமதமாக ஓராண்டு வரை கணக்கை தாக்கல் செய்யலாம். ஆனால் அதற்கு 234 பிரிவின் படி அபராதம் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் தொகையை, உரிய நிதி ஆண்டில் செலுத்தத் தவறியதற்காக கட்ட நேரிடும். வருமான வரிக் கணக்கு செலுத்தத் தவறியதற்கு ஏற்கத்தக்க விளக்கத்தை அளித்தால் அந்த அபராதமும் செலுத்தத் தேவையில்லை என்கின்றனர் வருமானவரித்துறை அதிகாரிகள்.
S .அருள்செல்வன் 
செயலர் ,FNPO P 3
பட்டுகோட்டை 

No comments:

Post a Comment