dob

அஞ்சல்தலை வெளியீட்டு விழா...



மாமன்னன் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா ஜெயங்கொண்டத்தில் இன்று துவங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து விழா ஒருங்கிணைப்பாளர் இரா. கோமகன் தெரிவித்துள்ளது:
விழாவையொட்டி, இன்று காலை கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள குருவாலப்பர் கோவில் மீரா மஹாலில் காலை 9.30 மணிக்கு கருத்தரங்கம், 10 மணிக்கு ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா மலர், கரந்தை செப்பேடுகள் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
தொடர்ந்து மாலையில், நாகஸ்வர இசை நிகழ்ச்சி, நாட்டியாஞ்சலி மற்றும் இசைமுழக்க நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு மகாபிஷேகமும், ஆராதனையும், அன்னதானமும் நடைபெறுகிறது.
மாலையில் ஆயிரமாவது ஆண்டை குறிக்கும் வகையில், தஞ்சையில் இருந்து தொடர் ஓட்டமாக தீபச்சுடர் கொண்டுவரப்பட்டு, கோவிலைச் சுற்றி ஆயிரம் தீபங்கள் ஏற்றப்படுகிறது.
மாலை 6 மணியளவில் கங்கைகொண்டசோழபுரம் ராஜேந்திரசோழன் அரங்கில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பன்முக சாதனைகள் என்ற தலைப்பில் வரலாற்று உரை மற்றும் அஞ்சல்தலை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment