தபால் துறையை மேம்படுத்துவதே மத்திய அரசின் தலையாயக் கடமை...
இந்தியாவில் இருக்கும் அனைத்து தபால் நிலையங்களுக்கும் நிலையான மற்றும் சரியான டிஜிட்டல் தொடர்பை ஏற்படுத்துவதே மத்திய அரசின் முக்கிய பணியாக உள்ளது, என் தொலைதொடர்பு அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தொலைதொடர்பு துறைக்கு சார்ந்த வந்த கேள்விகளுக்கு பதில் அளித்த ரவி ஷங்கர், பிரசமர் நரேந்திர மோடி தனிப்பட்டமுறையில் சில துறைகளை கவனித்து வருகிறார். இதில் தபால் துறையும் ஒன்று என அவர் தெரிவித்தார்.
மாதிரி வங்கி உரிமம் பெற்ற தபால் துறையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல எப்படி செயல்பட வேண்டும் என பிரதமர் ஒன்றரை மணி நேரம் விளக்கம் அளித்ததாகவும் ரவி ஷங்கர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் இந்திய தபால் துறையில் அதிகப்படியான மாற்றங்கள் தேவை எனவும், குறிப்பாக கிராம மக்கள் பயனடைய கிராமீன் டக் கார் திட்டத்தை மேம்படுத்தவும் தொலைதொடர்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
S.அருள்செல்வன்
செயலர்
தேசிய அஞ்சல் சங்கம்
பட்டுகோட்டை.
No comments:
Post a Comment