dob

கும்பகோணம் பள்ளி தீவிபத்து: பள்ளி நிர்வாகிக்கு 10 ஆண்டு சிறை; 9 பேருக்கு 5 ஆண்டு சிறை
கும்பகோணம் பள்ளி தீவிபத்து: பள்ளி நிர்வாகிக்கு 10 ஆண்டு சிறை; 9 பேருக்கு 5 ஆண்டு சிறை
தஞ்சாவூர்: 94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில், பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், அவரது மனைவியும் பள்ளியின் தாளாளருமான சரஸ்வதிக்கு 5 ஆண்டு சிறையும் விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன் 94 குழந்தைகளின் உயிரை பலி கொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முதற்கட்ட தீர்ப்பில், வழக்கில் சம்பந்தப்பட்ட 21 பேரில், 11 பேரை விடுதலை செய்துள்ள தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம், மீதம் உள்ள 10 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது. 
குற்றவாளிகள் யார் யார்? ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளி நிறுவனர் புலவர் பழனிசாமி, அவருடைய மனைவியும் பள்ளி தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஆர். பாலாஜி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். 10 ஆண்டு சிறை தண்டனை இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்கான தண்டனையை பிற்பகலில் நீதிபதி அறிவித்தார். அதன்படி, பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், அவரது மனைவியும் பள்ளியின் தாளாளருமான சரஸ்வதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், எஞ்சிய 8 பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.



No comments:

Post a Comment