dob

உட்கட்டமைப்பு மேம்பாடு- 4 அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட மோடி அட்வைஸ்!


டெல்லி: உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் 4 அமைச்சகங்களை ஒருங்கிணைந்து செயல்பட பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது உட்கட்டமைப்புக்கு முன்னுரிமை தருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதை செயல்படுத்துவதிலும் மோடி தற்போது முனைப்புடன் உள்ளார்.

இது குறித்து சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரிக்கு உரிய அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். அத்துடன் சாலை போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, ரயில்வே மற்றும் கப்பல்துறை அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார். இந்த 4 அமைச்சர்களும் இணைந்து மாதம் ஒரு முறை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவும் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். தேவைப்படும் நிலையில் நிதித்துறை, பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சக பிரதிநிதிகளும் இந்த கூட்டங்களில் கலந்து கொள்ள மோடி அறிவுறுத்தியிருக்கிறார்.


No comments:

Post a Comment