dob

ரயில்வே பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள்..

தபால் அலுவலகம், செல்போன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஊக்கம் தரப்படும்: சதானந்தா கவுடா
நாடாளுமன்றத்தில் 2014-15ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கௌடா தாக்கல் செய்துள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு மத்திய அரசு தாக்கல் செய்யும் முதல் ரயில்வே பட்ஜெட் இது.
தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள சதானந்த கௌடா, ரயில்வே துறை ஒவ்வொரு ஒரு ரூபாயையும் சம்பாதிக்க 94 பைசாக்களை செலவிடுவதாகக் கூறினார்.

இந்திய ரயில்வேயில் தற்போது 5,400 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் உள்ளன. அவை அனைத்தும் முற்றிலும் மூடப்பட்டு மாற்றுப் பாதைகள் அமைத்துத் தரப்படும்.
அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் உணவு கூடங்கள் அமைத்துத் தரப்படும்.
ரயில்களில் உணவு குறித்து பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இதைத் தடுக்க மிகவும் பிரபலமான சமைத்து தயாராக இருக்கும் உணவுகள் ரயிலில் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
இந்தியாவில் உள்ள ஏ கிளாஸ் ரயில் நிலையங்களுக்கு வை - பை இணைப்பு அறிமுகம் செய்யப்படும் என்று சதானந்த கௌடா அறிவித்துள்ளார்.
மேலும், மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கப்படும்.
ரயில்களின் வேகத்தை மணிக்கு 160ல் இருந்து 200 கிமீ என்ற அளவுக்கு அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை கற்பிக்கும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றார்.
ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 4,000 பெண் காவலர்கள் ரயில்வே துறையால் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
மேலும், ரயில் பயணத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற 17,000 ஆர்பிஎப் காவலர்கள் பணியாற்றுவார்கள் என்றார்.
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மையை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
புதிய வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்க ஆய்வுகள் செய்யப்பட்டு வருவதாக சதானந்த கௌடா கூறியுள்ளார்.
மேலும், புதிய ரயில் நிலையங்களையும், ரயில் நிறுத்தங்களையும் அமைப்பது குறித்து பொதுமக்களிடம் இருந்து வரும் வலியுறுத்தல்களை வைத்தே முடிவு செய்யப்படும்.
ரயில்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை பத்திரமாகக் கொண்டு செல்ல தட்பவெப்பத்தை கட்டுப்படுத்தும் கூடங்கள் அமைக்கப்படும்.
ரயில்களில் சிறப்பு பால் டேங்குகள் நிறுவப்படும் என்றார்.
சென்னையில் இருந்து அதிகவேக ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - ஹைதராபாத் இடையே அதிகவே ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை - மைசூர் இடையே அதிகவேக ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இந்த ரயில்கள் மணிக்கு 160 கி.மீ. முதல் 200 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.
2014 - 2015 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் ஒட்டு மொத்தமாக 5 ஜன்சாதாரண் ரயில்கள், 5 ப்ரீமியம் ரயில்கள், 6 ஏசி ரயில்கள், 27 விரைவு ரயில்கள், 8 பயணிகள் ரயில்கள், 5 டிஇஎம்யு மற்றும் 2 எம்இஎம்யு சேவைகளும், 11 ரயில்களின் பயணத்தை நீட்டித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment