காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு : செவ்வாயன்று 3,190 மெகாவாட்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி தற்போது அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக 3,190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, மொத்த மின் உற்பத்தி 11,720 மெகாவாட்டாக இருந்ததால், மின் தேவையும், மின் உற்பத்தியும் சமநிலை அடைந்து மின் பற்றாக்குறை ஏற்படவில்லை என்று மின்சாரத் துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment