dob

வருமான வரி Returns 

 செலுத்த இன்றே கடைசி நாள்

When is due date for income tax return

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி தாக்கல் செய்ய இன்றே (ஜூலை 31) கடைசி நாளாகும்.
இதற்கு மேலும் வருமான வரித் தாக்கலுக்கு காலக்கெடு வழங்கப்படாது என்பதால் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கானோர் தங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்ய வருமான வரி அலுவலகங்களில் குவிந்துள்ளனர்.
ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளவர்கள் தங்களது வருமான வரி கணக்கை ஆன்-லைன் மூலமாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாதச் சம்பளதாரர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை நெரிசலின்றி தாக்க செய்ய வசதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி தலைமை அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட சிறப்புப் பிரிவுகள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை, நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட சிறப்புப் பிரிவுகளில் (கவுன்ட்டர்) கடந்த இரண்டு நாள்களில் மாதச் சம்பளதாரர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் தங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தனர்.
S .அருள்செல்வன் 
கோட்ட செயலர் FNPO P 3
பட்டுகோட்டை. 
98428 10999

கும்பகோணம் பள்ளி தீவிபத்து: பள்ளி நிர்வாகிக்கு 10 ஆண்டு சிறை; 9 பேருக்கு 5 ஆண்டு சிறை
கும்பகோணம் பள்ளி தீவிபத்து: பள்ளி நிர்வாகிக்கு 10 ஆண்டு சிறை; 9 பேருக்கு 5 ஆண்டு சிறை
தஞ்சாவூர்: 94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில், பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், அவரது மனைவியும் பள்ளியின் தாளாளருமான சரஸ்வதிக்கு 5 ஆண்டு சிறையும் விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன் 94 குழந்தைகளின் உயிரை பலி கொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முதற்கட்ட தீர்ப்பில், வழக்கில் சம்பந்தப்பட்ட 21 பேரில், 11 பேரை விடுதலை செய்துள்ள தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம், மீதம் உள்ள 10 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது. 
குற்றவாளிகள் யார் யார்? ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளி நிறுவனர் புலவர் பழனிசாமி, அவருடைய மனைவியும் பள்ளி தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஆர். பாலாஜி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். 10 ஆண்டு சிறை தண்டனை இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்கான தண்டனையை பிற்பகலில் நீதிபதி அறிவித்தார். அதன்படி, பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், அவரது மனைவியும் பள்ளியின் தாளாளருமான சரஸ்வதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், எஞ்சிய 8 பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.



மக்கள் கருத்தை அறிய புதிய இணையதளம்
 "மை கவ்' (MyGov)
 இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான
அரசு நிர்வாகத்தில் நாட்டு மக்கள், தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் "மை கவ்' (MyGov) என்ற புதிய இணையதள சேவையை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று 60 நாள்கள் நிறைவடைந்துள்ள தினத்தில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கும், மக்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கும் பாலமாக இந்த இணையதளம் செயல்படும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு தங்கள் நேரத்தையும், உழைப்பையும் அளிக்க பொது மக்கள் தயாராக உள்ளனர். இதை கடந்த 60 நாள் ஆட்சியில் எனது அரசு உணர்ந்துள்ளது.
ஆகையால்தான், அரசு நிர்வாகத்துக்கு நாட்டு மக்கள், தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதற்காக இந்த புதிய இணையதளம் (ம்ஹ்ஞ்ர்ஸ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) தொடங்கப்பட்டுள்ளது.
இதில், கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல், திறன் மேம்பாடு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து, மக்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்யலாம். இது அரசு நிர்வாகத்துக்கும், பொது மக்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கும் பாலமாக செயல்படும். பொதுமக்கள் பங்களிப்பில்லாமல் ஜனநாயகம் எப்போதும் வெற்றி பெறாது.
மக்களின் பங்களிப்பு தேர்தலுடன் நின்றுவிடக்கூடாது. இந்த இணையதளத்தை நடைமுறைப்படுத்தியுள்ள மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை, அதைத் தொடர்ந்து கையாளும். தொழில்நுட்ப அடிப்படையிலான இந்த இணையதளம், நல்லாட்சிக்கு மக்களும் பங்களிப்பு செய்யும் வகையில் வாய்ப்பு வழங்கும் என்று செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 மாதங்களில் ஆய்வு: இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் ஆர்.எஸ். சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், "கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல், பெண் குழந்தைகளுக்கான கல்வி, சுத்தமான இந்தியா, திறன் மிக்க இந்தியா, வேலைவாய்ப்பு மற்றும் கணினிமயமாக்கப்பட்ட இந்தியா என ஆறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அந்த இணையதளத்தில் தற்போதைக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டு அவர்களின் கருத்துகள், ஆலோசனைகள், எண்ணங்கள் பெறப்படும்.
அவை நிபுணர்கள் குழுவில் வைக்கப்பட்டு, விவாதம் நடத்தப்படும். அதில் ஏற்றுக் கொள்ளப்படும் கருத்துகள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளப்படும். இந்த இணையதளத்தின் செயல்பாடு குறித்து 3 மாதங்களில் ஆய்வு செய்யப்படும். அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள், கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் மீதும் மக்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம்' என்று கூறினார்.
கருத்து பதிவு செய்வது எப்படி?: இந்தப் புதிய இணையதளத்தில் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம். இதற்காக "ஆலோசனை', "செயல்' என்ற இரு பிரிவுகள் இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
அதைச் சொடுக்கி (கிளிக் செய்து) தங்கள் விவரங்களைப் பதிவு செய்து "பயன்பாடு பெயர்' மற்றும் "கடவுச் சொல்' பெறலாம். அதைக் கொண்டு, பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பதிவு செய்யலாம்.
அரசுச் செயலர்களுடன் ஆலோசனை: இதனிடையே, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, உள்கட்டமைப்பு தொடர்பான முக்கிய அமைச்சகங்களின் செயலர்களுடன் மோடி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மின்னுற்பத்தி, ரயில்வே, சாலைப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, பெட்ரோலியம், விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், மாற்று எரிசக்தி, நிலக்கரி உள்ளிட்ட அமைச்சகங்களின் செயலர்கள் பங்கேற்றனர்.
மத்தியத் திட்டக் குழுவின் செயலர் சிந்துஸ்ரீ குல்லர், 2013-14ஆம் ஆண்டில் முக்கிய அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்தும், நிகழாண்டில் அந்தத் துறைகளுக்குள்ள சவால்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
நிகழாண்டில் 300 கி.மீ. தூரம் புதிதாக ரயில் பாதை அமைப்பதற்கும், 700 கி.மீ. இரட்டை வழி ரயில்பாதை அமைப்பதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்தும், 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு 2017ஆம் ஆண்டுக்குள் அகண்ட அலைவரிசை சேவை வழங்குவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் தீ விபத்து!

 சென்னையில் அரசு அலுவலகங்கள் இயங்கும் சேப்பாக்கம் எழிலகத்தின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சென்னையில் உள்ள மிகப் பழமையான கட்டிடங்களில் ஒன்று சேப்பாக்கம் காமராஜர் சாலையில் மெரினா கடற்கரைக்கு எதிரே உள்ள எழிலகமும் ஒன்று. இங்கு பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் 16-ந் தேதியன்று எழிலகத்தின் 3வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் 2012ஆம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதியன்று நள்ளிரவில் இதே எழிலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் அன்பழகன் பலியானார். பல தீயணைப்பு துறை அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் முக்கிய அரசு ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. இந்த நிலையில் இன்று பகலில் எழிலகத்தின் முதலாவடி மாடியில் திடீரென தீ பற்றி எரிந்தது. தீ பரவியதில் முதலாவது மாடியில் இருந்த வேளாண்துறை அலுவலகம் முற்றிலுமாக எரிந்து நாசமாகியது. இது பற்றி தகவல் அறிந்ததும் 4 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

S .அருள்செல்வன் 
செயலர்
பட்டுகோட்டை 
Supply of Medicines to CGHS Beneficiaries
Government empanels private hospitals under CGHS for indoor treatment and treatment can be undertaken with prior permission or under emergency.

OPD medicines are issued by CGHS Wellness Centers on the prescription by CGHS Medical officers/Government specialists.

In case of Cardiac surgery, Cancer treatment, Neuro-surgery, Renal transplantation and Hip/Knee Joint replacement surgery, there is provision for issue of permission for post-operative follow up treatment from the same empanelled hospitals, where the initial treatment was taken with prior permission. In such cases OPD medicines as per the available brand name / generic name are issued by CGHS Wellness Centers.

In respect of other post-operative cases, where permission was granted, there is provision for issue of OPD medicines on the prescriptions of empanelled hospital for up to one month.

The Health Minister stated this in a written reply in the Lok Sabha here today.

அஞ்சல்தலை வெளியீட்டு விழா...



மாமன்னன் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா ஜெயங்கொண்டத்தில் இன்று துவங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து விழா ஒருங்கிணைப்பாளர் இரா. கோமகன் தெரிவித்துள்ளது:
விழாவையொட்டி, இன்று காலை கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள குருவாலப்பர் கோவில் மீரா மஹாலில் காலை 9.30 மணிக்கு கருத்தரங்கம், 10 மணிக்கு ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா மலர், கரந்தை செப்பேடுகள் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
தொடர்ந்து மாலையில், நாகஸ்வர இசை நிகழ்ச்சி, நாட்டியாஞ்சலி மற்றும் இசைமுழக்க நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு மகாபிஷேகமும், ஆராதனையும், அன்னதானமும் நடைபெறுகிறது.
மாலையில் ஆயிரமாவது ஆண்டை குறிக்கும் வகையில், தஞ்சையில் இருந்து தொடர் ஓட்டமாக தீபச்சுடர் கொண்டுவரப்பட்டு, கோவிலைச் சுற்றி ஆயிரம் தீபங்கள் ஏற்றப்படுகிறது.
மாலை 6 மணியளவில் கங்கைகொண்டசோழபுரம் ராஜேந்திரசோழன் அரங்கில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பன்முக சாதனைகள் என்ற தலைப்பில் வரலாற்று உரை மற்றும் அஞ்சல்தலை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
தபால் துறையை மேம்படுத்துவதே மத்திய அரசின் தலையாயக் கடமை...
இந்தியாவில் இருக்கும் அனைத்து தபால் நிலையங்களுக்கும் நிலையான மற்றும் சரியான டிஜிட்டல் தொடர்பை ஏற்படுத்துவதே மத்திய அரசின் முக்கிய பணியாக உள்ளது, என் தொலைதொடர்பு அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தொலைதொடர்பு துறைக்கு சார்ந்த வந்த கேள்விகளுக்கு பதில் அளித்த ரவி ஷங்கர், பிரசமர் நரேந்திர மோடி தனிப்பட்டமுறையில் சில துறைகளை கவனித்து வருகிறார். இதில் தபால் துறையும் ஒன்று என அவர் தெரிவித்தார்.


மாதிரி வங்கி உரிமம் பெற்ற தபால் துறையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல எப்படி செயல்பட வேண்டும் என பிரதமர் ஒன்றரை  மணி நேரம் விளக்கம் அளித்ததாகவும் ரவி ஷங்கர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் இந்திய தபால் துறையில் அதிகப்படியான மாற்றங்கள் தேவை எனவும், குறிப்பாக கிராம மக்கள் பயனடைய கிராமீன் டக் கார் திட்டத்தை மேம்படுத்தவும் தொலைதொடர்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

S.அருள்செல்வன் 
செயலர் 
தேசிய அஞ்சல் சங்கம் 
பட்டுகோட்டை.