(திண்டுக்கல் ME போட்டாரு பாருங்க My stamp பிராக்கெட்ட...
மற்ற ME க்களும் இதை follow பண்ணலாமே...)
மற்ற ME க்களும் இதை follow பண்ணலாமே...)
ஓட்டுநருக்கு தபால்தலை!
ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்றால், வழக்கமாக ஒரு பிரிவு உபசார விழா நடத்துவார்கள். ஆனால், சமீபத்தில் திண்டுக்கல்லில் நடந்த அந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் கையால், ஓய்வு பெறுபவர் உருவம் பதித்த தபால்தலை வெளியிட்டு, அவரை கௌரவப்படுத்திருக்கிறார்கள். அப்படி என்ன செய்தார் அவர்?

தமிழ்நாடு சமூக நலத் துறையின் திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில், ஓட்டுநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற குழந்தைசாமிக்குத்தான் இந்த மரியாதை. காரணம், இவர் ஓட்டுநராகப் பணிபுரிந்த 23 ஆண்டுகளில், ஒரு விபத்துகூட நடந்தது இல்லையாம்.
சமூக நலத்துறைப் பகுதி கண்காணிப்பாளர் ரமேஷ் பேசும்போது, ''குழந்தை அண்ணனின் 23 ஆண்டு கால அனுபவத்தில், எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடந்தது இல்லை. அப்படிப்பட்ட இவருக்கு, ஓய்வு பெறும்போது நினைவில் எப்போதும் நிற்பதுபோல ஒரு பரிசு கொடுக்கலாம் என எங்கள் துறை ஊழியர்கள் அனைவரும் ஆசைப்பட்டோம். அவருக்குச் சிறப்பு செய்ய, தலைவர்களுக்கு மட்டுமே வெளியிடும் தபால்தலையை குழந்தை அண்ணனுக்கு வெளியிட்டோம்'' என்றார்.

நன்றி :மோட்டார் விகடன்
No comments:
Post a Comment