dob


டெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வங்கி நிறுவனமான, ஹெச்.டி.எஃப்.சி வங்கி தலைசிறந்த பிராண்டாக இந்தியாவில் உருவெடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 9.4 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு விளம்பரம் மற்றும் பொது உறவுகள் துறையில் முதன்மை நிறுவனமாக விளங்கும் WPP Plc நிறுவனம், இந்தியாவில் முதன் முறையாக இந்திய நிறுவனங்களை பற்றிய BrandZ என்ற பட்டியிலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்தியாவில் 2100 நகரங்களில் செயல்படும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி பிடித்துள்ளது

    இப்பட்டியலில் 9,425 மில்லியன் டாலருடன் ஹெச்.டி.எஃப்.சி வங்கி முதல் இடத்தையும், 8217 மில்லியன் டாலர் மதிப்புடன் ஏர்டெல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முன்றாம் இடத்தை பொது துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி 6,828 மில்லியன் டாலர் மதிப்பீட்டுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

No comments:

Post a Comment