dob

Useful tips...

கொசுத் தொல்லையில் இருந்து விடுதலை தரும் இயற்கைப் பொருட்கள்!!!

சூடம்/கற்பூரம் ஒரு பௌலில் தண்ணீர் ஊற்றி, அதில் சில துண்டுகள் கற்பூரத்தைப் போட்டு, கொசுக்கள் நுழையும் இடத்தில் வைத்தாலும், கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம்.

காபித் தூள் காபித் தூளின் நறுமணமும் கொசுக்களுக்கு பிடிக்காது. ஆகவே நீங்கள் உட்காரும் இடத்தின் அருகில் ஒரு பௌலில் காபித் தூளை வைத்துக் கொண்டு உட்காருங்கள். பின் பாருங்கள் கொசுக்கள் உங்களை நெருங்கவே நெருங்காது.
வேப்ப எண்ணெய் வேப்ப எண்ணெயும் கொசுக்களை அண்ட விடாமல் தடுக்கும். ஏனெனில் இதில் நிறைந்துள்ள கெமிக்கலானது கொசுக்களுக்கு அழிவை ஏற்படுத்தும். ஆகவே இதனை சருமத்தில் தடவிக் கொள்வதும் நல்ல பலனைக் கொடுக்கும்.

யூகலிப்டஸ் ஆயில் யூகலிப்டஸ் ஆயிலை சருமத்தில் தடவிக் கொண்டாலும் கொசுக்கடியில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.

எலுமிச்சை மற்றும் கிராம்பு எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதன் மேல் கிராம்பை சொருகி, கொசுக்கள் நுழையும் இடத்தில் வைத்தால், அதன் வாசனையினால் கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம்.



No comments:

Post a Comment