புதுடெல்லி: தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக பயன்படுத்த வலியுறுத்தி உத்ரகண்ட் மாநிலத்தை சேர்ந்த எம்.பி.தருண் விஜய் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மனு அளித்துள்ளார். பண்பாட்டு சிறப்பு மிக்க தமிழ் மொழியின்பால் பற்றுகொண்ட அவர் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை இது தொடர்பாக சந்தித் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழ் விரைவாக அறிவிக்கப்படுவது உறுதி என்று அவர் தெரிவித்தார்.
தமிழ் வழக்காடும் மொழியாக அறிவிக்கப்படும் வரை அதற்கான முயற்சி தொடரும் என்று தருண்விஜய் கூறினார். திருவள்ளுவரின் பிறந்த நாளான ஜனவரி 15-ம் தேதியை தேசிய மொழிகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment