மோடி பயத்தால் முக்கிய திட்டங்களை 24 மணிநேரத்தில் உறுதி செய்த அமைச்சகங்கள்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு பயந்து அமைச்சக அதிகாரிகள் படு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்களாம்.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மோடி அரசின் தலையாய திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார். இதையடுத்து அந்த திட்டங்கள் குறித்த விளக்க உரைகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தயாரிக்க துவங்கிவிட்டனவாம்.
முக்கிய திட்டங்களை பிரதமர் அலுவலகம் தேர்வு செய்து அது குறித்த விளக்கமான திட்டங்களை விரைந்து தயாரித்து அளிக்குமாறு அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. பிரதமர் இந்த திட்ட விளக்கங்களை எப்பொழுது பார்ப்பார் என்பது தெரியாததால் அமைச்சகங்கள் 24 மணிநேரத்திற்குள் திட்ட விளக்கங்களை தயார் செய்து அவற்றை அமைச்சக செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளன.
பிரதமர் அலுவலகம் தெரிவித்த விவகாரங்களுக்கு பதில் அளிப்பதில் மூத்த அதிகாரிகள் கடந்த செவ்வாய்கிழமை பிசியாக இருந்தனர்.அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை, சுத்தமான குடிநீர் வழங்க மோடி அரசு முனைப்பாக உள்ளதால் ஸ்வச் பாரத் மிஷன் திட்டம் குறித்த விளக்க உரையை குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் தயார் செய்து வருகிறது.நகரங்களை மேம்படுத்த, புதிய நகரங்களை உருவாக்க தேவையான திட்ட விளக்கங்களை நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தயாரித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment