ஜூலை 1 முதல் உயருகிறதுபி.எஸ்.என்.எல்., கட்டணம்
பி.எஸ்.என்.எல்., தரைவழி போனில் இருந்து, மொபைல் போன் மற்றும் வில் போன்களுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கான கட்டணம், ஜூலை, 1ம் தேதி முதல் உயருகிறது.இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள அறிக்கை:பி.என்.என்.எல்., தரைவழி போனில் இருந்து, பி.எஸ்.என்.எல்., வில் போனுக்கு செய்யப்படும் உள்ளூர் அழைப்புகள், முன்பு, 180 வினாடிகள் ஒரு அழைப்பாக இருந்தது, 120 வினாடிகளாக குறைக்கப்படுகிறது. இதேபோல், பி.எஸ்.என்.எல்., மொபைல் போன்களுக்கு செய்யப்படும் ஒரு அழைப்பு, 120 வினாடியிலிருந்து, 90 வினாடியாக குறைக்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., தரை வழி போனில் இருந்து, தனியார் நிறுவன மொபைல் போன்களுக்கு செய்யப்படும் ஒரு உள்ளூர் அழைப்பு, 120 வினாடியாக இருந்தது, 90 வினாடியாக குறைக்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல்., தரை வழி போனிலிருந்து, பிற தனியார் மொபைல் போன்களுக்கு செய்யப்படும், ஒரு வெளியூர் அழைப்பு, 120 வினாடியிலிருந்து, 90 வினாடியாக குறைக்கப்படுகிறது.மேலும், கிராமப்புற இணைப்புகளுக்கு, நிர்ணயிக்கப்பட்டு இருந்த மாதாந்திர கட்டணம், 110 ரூபாயிலிருந்து, 120 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.அழைப்புக்கான கால அளவு குறைக்கப்படுவதால், பி.எஸ்.என்.எல்., தரை வழி போன் கட்டணம், ஜூலை, 1ம் முதல் உயருகிறது.
No comments:
Post a Comment