செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்!
செல்போன் பற்றிய பீதியை மத்திய அரசே பற்ற வைத்துள்ளது. கடந்த வாரத்தில் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை வெளியிட்ட விளம்பரத்தில் செல்போனை எப்படி பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி இருந்த கட்டளைகள் மரண பயத்தை விதைப்பதாக உள்ளன. ஏன் இந்தத் திடீர் விளம்பரம்..?
மனிதன் கண்டுபிடித்தப் பொருட்கள் அனைத்தும், ஆக்கத்துக்கும் அழிவுக்கும் அடிப்படையாக இருக்கின்றன என்ற கூற்று அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. தொலைத் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் செல்போனும் இதுக்கு விதிவிலக்கல்ல. செல்போன் கதிர்வீச்சால் மனிதனுக்குப் பாதிப்பு என்று ஆய்வுகள் மூலம் சொல்லப்பட்டாலும், யாரும் அதைப் பயன்படுத்தாமல் இருக்கப் போவதில்லை. ஆனால் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு உணர்த்தவே அந்த அறிவிப்பை மத்திய அரசு செய்துள்ளது.
ஒவ்வொரு செல்போனிலும் இருந்து பேசும் நேரத்துக்கேற்ப கதிர்வீச்சின் தன்மை (Specific Absorption Rate -SAR) அளவிடப்படும். ஒரு கிராம் மனித திசுவுக்கு சராசரியாக 1.6W/kg என்ற அளவில் இருத்தல் வேண்டும். இந்த அளவானது, சீன தயாரிப்பு செல்போன்கள் அனைத்திலும் மாறுபட்டு இருக்கும். அவற்றைப் பயன்படுத்துவதால் பாதிப்பு அதிகளவில் இருக்கும். அவை சாதாரண பிரச்னைகள் முதல் காதுகேளாமை வரை ஏற்படுத்தும். அதிகப்படியான கதிர்வீச்சு காரணமாக மூளைப் புற்றுநோய்க்கட்டிகள் வரும் ஆபத்து குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. எனினும், அவை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு மண்டை ஓடு மிகவும் மெல்லியதாக இருக்கும். கதிர்வீச்சு காரணமாக பிற்காலத்தில் அவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.

தேசிய தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் செயலாளர் சி.கே.மதிவாணனிடம் பேசினோம். ''சில தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் செல்போன் சிக்னல் சரியாக இருக்கும். ஆனால், இது மனிதர்கள், பறவைகள் மற்றும் சூழலுக்குத்தான் ஆபத்து. 1 வாட் (செல்போன் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவு) ஆற்றல் மூலம் மைக்ரோவேவ் அடுப்பில் ஒரு லிட்டர் நீரை 1 டிகிரி செல்சியஸ் வரைச் சூடாக்க 500 விநாடிகள் தேவைப்படுகின்றன. நாம் தொடர்ந்து மொபைல் போனில் பேசுவதால் காதுமடல்கள் மூலம் உள்ளிருக்கும் உறுப்புகளுக்கும் வெப்ப அதிகரிப்பால் பாதிப்பு ஏற்படும். அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தங்களுக்கு என வரையறுக்கப்பட்ட அளவை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதனால்தான், அவர்களுடைய சிக்னல் அளவு குறைவாக உள்ளது என மக்கள் தெரிவிக்கிறார்கள். சிக்னல் நன்றாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகச் செய்யும் ஏற்பாடு, மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்' என்றார்.
திடீரென்று மொபைல் ரிங்டோனோ அல்லது குறுஞ்செய்தியோ வந்ததுபோல் இருக்கும். ஆனால், போனை எடுத்துப் பார்த்தால் எதுவும் இருக்காது. அதேபோல அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கத் தூண்டும். இது சாதாரண விஷயமாகத் தோன்றலாம் ஆனால், இதுவும் ஒருவகை மனநோய் பாதிப்புதான். இதன் பெயர் 'ரிங்டோன் ஃபோபியா.’ இப்படியாக, போனை எடுத்துப் பார்ப்பது அடிக்கடி நிகழ்ந்தால் நம்மை அறியாமலேயே டென்ஷன், பதற்றம், கோபம், முரட்டுத்தனம், படபடப்பு ஆகியவை நமக்கு ஏற்படும். இது தொடர்ந்தால் செல்போனைக் கண்டாலோ எரிச்சல் வந்துவிடும். இந்தப் பிரச்னைகளுக்குச் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் ஒரு கட்டத்தில் மனநோய்கூட ஏற்படலாம்.
ஆபத்தையும் கையோடு சேர்த்தே வைத்திருக்கிறோம். ஜாக்கிரதை!
செல்போனை ஜாக்கிரதையாகப் பயன்படுத்த சில யோசனைகள்!
செல்போனைப் பயன்படுத்தும்போது காது மடலில் வலி, காது சூடாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதனால் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்துவதன் மூலம் செல்போன் கதிர்வீச்சு பாதிப்புகளில் இருந்து ஓரளவு தப்ப முடியும்.
உங்கள் செல்போனின் சிக்னல் குறைவாக இருக்கும்போது, செல்போனில் பேசுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அந்த நேரத்தில் செல்போன், சிக்னலை முழுமையாகப் பெற அதிக அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்தும்.
செல்போன் பேசும்போது மூளையின் செயல்பாடு சற்றே அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, ஒரே பகுதியில் போனை வைத்துப் பேசாமல் அவ்வப்போது மாற்றி மாற்றி வைத்துப் பேசுங்கள்.
தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துவிட்டுத் தூங்கும் பழக்கத்தைத் தவிர்க்கவேண்டும். காரணம் ரேடியோ அலைவரிசைகள் மூளையைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
காதில் செவித்திறன் கருவிகள் ஏதேனும் பொருத்தியிருந்தால், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இருந்து 15-30 செ.மீ தூரத்துக்கு செல்போனைத் தள்ளியே வைத்துப் பேசுங்கள்.
மொபைல் வாங்கும்போதே அதனின் ஷிகிஸி அளவை சரி பார்த்துக்கொள்ளவும்.
அழைப்பு இணையப்பெற்ற பிறகு போனைக் காதில் வைத்துப் பேசவும். காரணம், முதல் ஒலியானது அதிக அளவில் தொடங்கி, பின்னர் தேவையான அளவுக்குக் குறையும். அழைப்பு இணையும் சமயத்தில் அதிக ஆற்றல் வெளிப்படும்.
செல்போன்களை சட்டையின் இடதுபக்க பாக்கெட்டில் வைத்தால், கதிர்வீச்சின் மூலம் இதயம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே அதைத் தவிர்க்கவும்.
போனில் பேசும்போது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்துப் பேசவும். கைகளால் முழுவதுமாகப் பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதைத் தவிர்க்கவும். பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் அதிகமாக உடல் பாகங்களைத் தாக்குகின்றன. மிக முக்கியமாக போனில் செலவிடும் நேரத்தைக் குறையுங்கள். அழைப்புகளுக்கான நேரத்தையும் கட்டுப்படுத்தினால் உடல்நலன் பாதுகாக்கப்படும்.
No comments:
Post a Comment