dob

டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் வாகனங்கள் தீப்பிடிக்கும் அபாயம்!
  Image result for petrol filling two wheeler bike tank full

   வெயில் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் வாகனம் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், ''கோடை வெயில் அதிகமாக இருக்கிறது. சென்னை உள்பட பல நகரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்நிலையில், பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் திறந்த வெளியில் கடும் வெயிலில் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்தால், கடுமையான வெப்பம் காரணமாக டேங்க் வெடிக்கவும், தீ பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்புவதற்கு பதிலாக அரை அல்லது முக்கால் டேங்க் பெட்ரோல் நிரப்பி மீதி காற்று நிரம்பி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment