dob

SMALL SAVINGS SCHEMES INTEREST RATES wef 01.04.2015 - PIB NEWS

Government Announces Interest Rates for Various Small Savings Schemes; Rates to Come Into Force with Effect from 01.04.2015


         It was decided by the Government of India that interest rates on Small savings Schemes will be linked to yields on government securities of comparable maturity. In pursuance of that decision, the Government has decided to revise the rates applicable on various small savings schemes as given in the table below.

The above rates will be effective from tomorrow i.e. 1.4.2015.

Thus the rates on many of the small savings scheme have undergone an upwards revision vis-à-vis 2014-15.
செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்!
Image result for cell phone radiation effects
செல்போன் பற்றிய பீதியை மத்திய அரசே பற்ற வைத்துள்ளது. கடந்த வாரத்தில் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை வெளியிட்ட விளம்பரத்தில் செல்போனை எப்படி பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி இருந்த கட்டளைகள் மரண பயத்தை விதைப்பதாக உள்ளன. ஏன் இந்தத் திடீர் விளம்பரம்..?

மனிதன் கண்டுபிடித்தப் பொருட்கள் அனைத்தும், ஆக்கத்துக்கும் அழிவுக்கும் அடிப்படையாக இருக்கின்றன என்ற கூற்று அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. தொலைத் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் செல்போனும் இதுக்கு விதிவிலக்கல்ல. செல்போன் கதிர்வீச்சால் மனிதனுக்குப் பாதிப்பு என்று ஆய்வுகள் மூலம் சொல்லப்பட்டாலும், யாரும் அதைப் பயன்படுத்தாமல் இருக்கப் போவதில்லை.  ஆனால் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு உணர்த்தவே அந்த அறிவிப்பை மத்திய அரசு செய்துள்ளது.

ஒவ்வொரு செல்போனிலும் இருந்து பேசும் நேரத்துக்கேற்ப கதிர்வீச்சின் தன்மை (Specific Absorption Rate -SAR)  அளவிடப்படும்.  ஒரு கிராம் மனித திசுவுக்கு சராசரியாக 1.6W/kg என்ற அளவில் இருத்தல் வேண்டும். இந்த அளவானது, சீன தயாரிப்பு செல்போன்கள் அனைத்திலும் மாறுபட்டு இருக்கும். அவற்றைப் பயன்படுத்துவதால் பாதிப்பு அதிகளவில் இருக்கும். அவை சாதாரண பிரச்னைகள் முதல் காதுகேளாமை வரை ஏற்படுத்தும். அதிகப்படியான கதிர்வீச்சு காரணமாக மூளைப் புற்றுநோய்க்கட்டிகள் வரும் ஆபத்து குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. எனினும், அவை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு மண்டை ஓடு மிகவும் மெல்லியதாக இருக்கும். கதிர்வீச்சு காரணமாக பிற்காலத்தில் அவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.


தேசிய தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் செயலாளர் சி.கே.மதிவாணனிடம் பேசினோம். ''சில தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் செல்போன் சிக்னல் சரியாக இருக்கும். ஆனால், இது மனிதர்கள், பறவைகள் மற்றும் சூழலுக்குத்தான் ஆபத்து.  1 வாட் (செல்போன் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவு) ஆற்றல் மூலம் மைக்ரோவேவ் அடுப்பில் ஒரு லிட்டர் நீரை 1 டிகிரி செல்சியஸ் வரைச் சூடாக்க 500 விநாடிகள் தேவைப்படுகின்றன. நாம் தொடர்ந்து மொபைல் போனில் பேசுவதால் காதுமடல்கள் மூலம் உள்ளிருக்கும் உறுப்புகளுக்கும் வெப்ப அதிகரிப்பால் பாதிப்பு ஏற்படும். அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தங்களுக்கு என வரையறுக்கப்பட்ட அளவை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதனால்தான், அவர்களுடைய சிக்னல் அளவு குறைவாக உள்ளது என மக்கள் தெரிவிக்கிறார்கள். சிக்னல் நன்றாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகச் செய்யும் ஏற்பாடு, மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்' என்றார்.
திடீரென்று மொபைல் ரிங்டோனோ அல்லது குறுஞ்செய்தியோ வந்ததுபோல் இருக்கும். ஆனால், போனை எடுத்துப் பார்த்தால் எதுவும் இருக்காது. அதேபோல அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கத் தூண்டும். இது சாதாரண விஷயமாகத் தோன்றலாம் ஆனால், இதுவும் ஒருவகை மனநோய் பாதிப்புதான். இதன் பெயர் 'ரிங்டோன் ஃபோபியா.’ இப்படியாக, போனை எடுத்துப் பார்ப்பது அடிக்கடி நிகழ்ந்தால் நம்மை அறியாமலேயே டென்ஷன், பதற்றம், கோபம், முரட்டுத்தனம், படபடப்பு ஆகியவை நமக்கு ஏற்படும். இது  தொடர்ந்தால் செல்போனைக் கண்டாலோ எரிச்சல் வந்துவிடும். இந்தப் பிரச்னைகளுக்குச் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் ஒரு கட்டத்தில் மனநோய்கூட ஏற்படலாம்.
ஆபத்தையும் கையோடு சேர்த்தே வைத்திருக்கிறோம். ஜாக்கிரதை!
செல்போனை ஜாக்கிரதையாகப் பயன்படுத்த சில யோசனைகள்!
செல்போனைப் பயன்படுத்தும்போது காது மடலில் வலி, காது சூடாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதனால் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்துவதன் மூலம் செல்போன் கதிர்வீச்சு பாதிப்புகளில் இருந்து ஓரளவு தப்ப முடியும்.
உங்கள் செல்போனின் சிக்னல் குறைவாக இருக்கும்போது, செல்போனில் பேசுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அந்த நேரத்தில் செல்போன், சிக்னலை முழுமையாகப் பெற அதிக அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்தும்.
செல்போன் பேசும்போது மூளையின் செயல்பாடு சற்றே அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, ஒரே பகுதியில் போனை வைத்துப் பேசாமல் அவ்வப்போது மாற்றி மாற்றி வைத்துப் பேசுங்கள்.
தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துவிட்டுத் தூங்கும் பழக்கத்தைத் தவிர்க்கவேண்டும். காரணம் ரேடியோ அலைவரிசைகள் மூளையைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
காதில் செவித்திறன் கருவிகள் ஏதேனும் பொருத்தியிருந்தால், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இருந்து 15-30 செ.மீ தூரத்துக்கு செல்போனைத் தள்ளியே வைத்துப் பேசுங்கள்.
மொபைல் வாங்கும்போதே அதனின் ஷிகிஸி  அளவை சரி பார்த்துக்கொள்ளவும்.
அழைப்பு இணையப்பெற்ற பிறகு போனைக் காதில் வைத்துப் பேசவும். காரணம், முதல் ஒலியானது அதிக அளவில் தொடங்கி, பின்னர் தேவையான அளவுக்குக் குறையும். அழைப்பு இணையும் சமயத்தில் அதிக ஆற்றல் வெளிப்படும்.
செல்போன்களை சட்டையின் இடதுபக்க பாக்கெட்டில் வைத்தால், கதிர்வீச்சின் மூலம் இதயம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே அதைத் தவிர்க்கவும்.
போனில் பேசும்போது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்துப் பேசவும். கைகளால் முழுவதுமாகப் பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதைத் தவிர்க்கவும். பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் அதிகமாக உடல் பாகங்களைத் தாக்குகின்றன. மிக முக்கியமாக போனில் செலவிடும் நேரத்தைக் குறையுங்கள். அழைப்புகளுக்கான நேரத்தையும் கட்டுப்படுத்தினால் உடல்நலன் பாதுகாக்கப்படும்.
டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் வாகனங்கள் தீப்பிடிக்கும் அபாயம்!
  Image result for petrol filling two wheeler bike tank full

   வெயில் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் வாகனம் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், ''கோடை வெயில் அதிகமாக இருக்கிறது. சென்னை உள்பட பல நகரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்நிலையில், பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் திறந்த வெளியில் கடும் வெயிலில் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்தால், கடுமையான வெப்பம் காரணமாக டேங்க் வெடிக்கவும், தீ பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்புவதற்கு பதிலாக அரை அல்லது முக்கால் டேங்க் பெட்ரோல் நிரப்பி மீதி காற்று நிரம்பி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
மிகுந்த வரவேற்பை பெற்று வரும் அஞ்சலக செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டம்: தமிழகத்தில் 2.50 லட்சம் கணக்குகள் தொடக்கம்
  பெண் குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தை புதுச்சேரி தலைமை தபால் அலுவலகத்தில் சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் தொடங்கி வைக்கிறார்

பெண் குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தை புதுச்சேரி தலைமை தபால் அலுவலகத்தில் சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் தொடங்கி வைக்கிறார்

இந்திய அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செல்வ மகள் சேமிப்பு கணக்குத் திட்டம் (சுகன்யா சம்ருத்தி யோஜனா) மக்களின் பெரும் வரவேற்பை பெற்று மிகக் குறுகிய காலத்திலேயே தமிழகத்தில் ஏறத்தாழ 2.50 லட்சம் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன.

பெண் குழந்தைகளின் எண் ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கவும், அவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் மத்திய அரசு இந்திய அஞ்சல் துறை சார்பில் சுகன்யா சம்ருத்தி யோஜனா என்ற சேமிப்புத் திட் டம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய அஞ்சல் துறையின் 4 மண்டலங்களிலும் பிப்ரவரி மாதத்தில் இந்த திட் டம் தொடங்கப்பட்டது. இதில் நேற்று (மார்ச் 25) வரை ஏறத் தாழ 2.50 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

திட்டத்தின் சிறப்பு அம்சம்

அனைத்து அஞ்சல் கிளை அலு வலகங்களிலும் இந்த கணக்கை தொடங்கலாம். கணக்கு தொடங்க பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், அடையாளச் சான்று ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

10 வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ இந்த கணக்கை தொடங்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும்.

கணக்கு தொடங்கியதிலிருந்து 14 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். 21-வது ஆண்டில் கணக்கு முதிர்வடை யும். அப்போது கணக்கில் சேர்ந் துள்ள பணத்தை அந்த பெண் குழந்தையே எடுத்துக் கொள்ள லாம். கணக்கு வைத்துள்ள பெண் ணுக்கு 18 வயது நிரம்பினால், அவரது கல்வி மற்றும் திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற் றுக்கொள்ளும் வாய்ப்புள்ளது.
முதலில் ரூ.1,000 செலுத்தி கணக்கு தொடங்க வேண்டும். தொடர்ந்து ரூ.100 மடங்கில் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.


இந்த திட்டம் குறித்து திருச்சி மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜெ.டி.வெங்கடேஸ்வரலு கூறியதாவது:

இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக நிகழ் நிதியாண்டில் 9.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. தற்போதுள்ள சிறுசேமிப்புத் திட்டங்களிலேயே அதிக வட்டி வழங்கப்படும் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு 80 சி பிரிவின் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம்.

தற்போது இந்த திட்டத்தின்கீழ் கணக்கு தொடங்குவதற்கு முக்கிய அஞ்சல் அலுவலகங்களில் தனி கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

மூன்றரை மடங்கு முதிர்வுத்தொகை

உதாரணமாக, மாதந்தோறும் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 செலுத்தினால் 14 ஆண்டுகள் நிறைவில் நாம் செலுத்திய ரூ.1.68 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.3.30 லட்சமாக இருக்கும். இந்த கணக்கு 21-வது ஆண்டில் நிறைவடையும்போது முதிர்வுத் தொகையாக ரூ.6.07 லட்சம் பெறலாம். இது உத்தேசமான கணக்கு தான். வட்டி விகிதம், செலுத்தும் தொகை அதிகமாகும்போது முதிர்வுத் தொகையும் அதிகரிக்கும்.

நன்றி : தி இந்து 


                                          Image result for indian rail
Press Information Bureau,
Government of India
Ministry of Railways
25-March, 2015

Advance Reservation Period for Booking Reserved Train Tickets increased from 60 days to 120 days from 1st april 2015

          The Ministry of Railways has decided to increase the Advance Reservation Period (ARP) for booking accommodation in trains from 60 days to 120 days (excluding the date of journey). Accordingly, w.e.f. 1st April 2015 the booking in trains from train originating stations will open and remain available for 120 days. For instance, as on 1.4.2015, for trains leaving on 28th July 2015, the reservation can be obtained for journey commencing on all days between 1.4.2015 upto 28.7.2015.

         There will, however, be no change in case of certain day time Express trains like Taj Express, Gomti Express, special trains etc, where lower time limits for advance reservations are at present in force. There will also be no change in the case of the limit of 360 days for foreign tourists.


Supreme Court terms Sec 66A of IT Act unconstitutional, Sec 69A and 79 remain with certain restrictions
சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லைஉச்ச நீதிமன்றம்
 Image result for freedom of expression  Image result for free speech online

Hailing the Supreme Court's decision to strike down the controversial Section 66Aof the IT Act, Shreya Singhal, one of the petitioners in the case, on Tuesday said that no one would fear expressing their opinions online anymore.
"Under Section 66A, you cannot be jailed anymore because the section stands invalid. I am not advocating the defamation of someone, but there are other provisions in the IPC, that ensure that hate speeches are dealt with. However, there is no blanket provision that will curtail your freedom of speech. No one should fear putting something up online anymore," said Singhal.
"There were two tests that were put to the Section 66A –clear and present danger and the probability of inciting hatred. Section 66A has failed those tests because the posts that people were jailed for did not incite public hatred or disrupted law and order," she added. Meanwhile, advocate Manali Singhal, Shreya's mother, opined that the consequences of the apex court's decision will be positive.
"We're very happy. The consequences are going to be very positive. Now people are not going to be scared to exchange and put their views on internet freely," she said. Earlier in the day, the Supreme Court struck down the IT Act Section 66A, terming it 'unconstitutional'. According to reports, the apex court ruled that the section falls outside Article 19(2), which relates to Freedom of Speech, and thus has to be struck down in its entirety.
The first PIL was filed in 2012 after two girls in Thane were arrested after commenting against the shutdown in Mumbai following Shiv Sena leader Bal Thackeray's death. In 2013, the apex court had come out with an advisory under which a person cannot be arrested without the police receiving permission from senior officers. Last week, the Uttar Pradesh Police had arrested a Class 11 student from Bareilly for allegedly posting 'objectionable remarks' against Samajawadi Party leader Azam Khan. 
சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்தை வெளியிட்டால் ஒருவரை கைது செய்ய வழிவகுக்கும்  தகவல் தொழில்நுட்ப சட்டத் திருத்தம் 66 செல்லாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 

சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டால் தண்டனை விதிக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில், 66 சட்ட திருத்தத்தை, கடந்த 2008ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இதனிடையே, கடந்த 2012ல் சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைந்த பின் நடந்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த மாணவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவி ஷ்ரேயா சின்ஹால் உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவிற்கு மத்திய அரசு அளித்த பதில் மனுவில், உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பதிவு செய்யப்படும் கருத்து சுதந்திரமான மெசேஜ்களை சமூக ஊடங்கங்களில் வெளியிடுவதை குற்றமாக கருத முடியாது. சமூக வலைதளங்களில் எரிச்சலூட்டும், சிரமமான  மற்றும் அபாயகரமான செய்திகளை பதிவு செய்யும் நபர்களை காவல்துறையினர் கைது செய்ய சட்டத்தில் அதிகாரம் உள்ளது. இதுகுறித்த கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்த அரசு விரும்பவில்லை. ஒருவர் தனது பேச்சு சுதந்திரத்தை  நடைமுறைப்படுத்தவது அல்லது அமலாக்குவது குற்றமல்ல. சைபர் குற்றங்களுக்கு ஏற்றவாறு இந்த சட்டம் மாற்றி செயல்படும் என்று தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, பாதுகாப்பான கருத்து சுதந்திரம் மற்றும் சட்டத்தை மீறுதல் தொடர்பாக கண்காணிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செலமேஸ்வர், நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அளித்த தீர்ப்பில், சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டால் தண்டனை விதிக்கும் வகையில் தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் பிரிவு கொண்டுவரப்பட்ட திருத்தம் 66 செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த சட்டத்திருத்தம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அரசாங்கங்கள் வரும் போகும், சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுவிடக்கூடாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி சுதந்திரமாக ஒருவர் கருத்தை பேச, எழுத உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.