dob

 HC directs company to remove CCTV camera from rest room.

ஊழியர்கள் ஓய்வறையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை அகற்ற வேண்டும்: தனியார் நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

Image result for cctv surveillance monitoring at work placeImage result for cctv surveillance monitoring at work place

The Madras High Court today directed a pharmaceutical company here to remove CCTV camera from its employee's rest room immediately since it is the employee's "private area". 

Justice C S Karnan, allowing a petition by the employees union of Raptakos, Brett and Company Limited seeking an order to the company for the removal of the camera in the rest room, said "the rest room area of the employees is a private area wherein no factory fixtures or raw materials or produced goods or operations of any kind were allowed. 

"This court is of further view that the employer and employees should maintain a smooth cordial relationship for welfare of all concerned. Hence this court is constrained to give the direction for the removal of the CCTV camera at the said rest room". 

The company installed CCTV camera at the rest room of the employees on Octobr 15, 2013 against which they approached the Deputy Commissioner of Labour on the next day. 

The official directed the management to remove it from the rest room of the employees. 

As the management did not heed to it, the employees' union approached the High Court. 

In their petition, the union submitted that the action of the management is contrary to Industrial Disputes Act. 

The action is contrary to Article 21 of the constitution of India, the union submitted.
வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியர்களின் ஓய்வறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வேளச்சேரி சாலையில் உள்ள ரேப்டகோஸ் பிரெட் நிறுவன தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
எங்கள் நிறுவனத்தில் 10 பெண்கள் உட்பட 78 பேர் பணிபுரிகிறோம். ஊழியர்கள் பணிபுரிகிறார்களா, இல்லையா என்பதை கண்காணிக்க நிறுவனத்தின் அனைத்து இடங்களிலும் 38 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. காலை 11 முதல் 11.15 வரையிலும், மாலை 3 முதல் 3.15 மணி வரையிலும் ஓய்வு நேரம் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், ஓய்வறைகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் எங்களது தனிமை பாதிக்கப்படுகிறது. பெண்கள் ஓய்வறைகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, ஓய்வறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை அகற்றுவதற்கு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், ‘‘ஓய்வறை என்பது ஊழியர்களின் தனிமைப் பகுதி. அங்கு தயாரிக்கப்பட்ட பொருட்களோ, மூலப் பொருட்களோ இல்லாத நிலையில் கண்காணிப்பு கேமரா என்பது தேவையற்றது.
எனவே, ஊழியர்களின் ஓய்வறையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை தொழிற்சாலை நிர்வாகம் அகற்ற வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment