ஸ்மார்ட்போன் மோகத்தில் இருந்து விடுவிக்கும் சூப்பர் ஆப்
OFFTIME app helps you unplug without missing urgent matters
A new app is here to not only help identify your bad habits – such as spending an inordinate amount of time on the phone – but also suggest ways to get rid of them.
A German psychologist Alexander Steinhart has developed the app called OFFTIME in collaboration with the Humboldt University of Berlin and designer Michael Dettbarn. A study at Humboldt University found that users were unlocking their phones 63 times per day. ”After using the app, that number declined. Users just unplugged for at least two hours per day,” Steinhart was quoted as saying in media reports.
The app is designed in such a way that you can unplug without missing urgent matters. It lets you list contacts who can pierce through your downtime, like your spouse or children, but otherwise shuts down apps, calls, texts and emails. The app can also auto-respond to incoming messages on your behalf while maintaining a careful activity log of everything you missed, while away, so you can quickly catch up. Offtime also provides similar insights about your usage of your phone like charting out hours spent on the device, and even detailing which individual apps are consuming your time the most.
Offtime is currently available for Android users.
ஸ்மார்ட்போன்கள் எப்போதும் நம்மை தொடர்பிலேயே வைத்திருக்கின்றன. அதுதான் சிக்கலே. வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, ஏன் பயணத்திலும் கூட கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் மூலம் தொடர்பிலேயே இருக்கலாம். இமெயிலில் இருந்து ஃபேஸ்புக் ஸ்டேட்ஸ் அப்டேட் வரை, வாட்ஸ் அப் செய்தி முதல் லேட்டஸ்ட் செய்தி வரை எல்லாவற்றையும் ஸ்மார்ட்போனிலேயே தெரிந்துகொள்ளலாம். ஸ்மார்ட்போனுக்கு பழகிய கைகள் நோட்டிபிகேஷன் அல்லது கால்கள் வராத நேரத்தில் கூட போனை எடுத்து பார்ப்பதற்கு பழகியிருக்கின்றன.
எப்போதும் தொடர்பில் இருக்கும் இந்த தன்மையின் பக்கவிளைவு ,நிஜ உலகுடனான தொடர்பில் இருந்தும் நெருங்கியவர்களிடம் இருந்தும் விலகி கொண்டே இருக்கிறோம். மனைவியுடனே மகனுடனோ பேசும் போது கூட ஸ்மார்ட்போனில் செய்தி வந்திருக்கிறதா? என்று பார்க்கும் பழக்கம் உறவுக்கு நல்லதல்ல. உறவுக்கு மட்டுமே அலுவலகத்தில் ஸ்மார்ட்போனில் பேஸ்புக் அப்டேட்டில் மூழ்கியிருந்தால் வேலையும்தான் கெட்டுப்போகும்.
இந்த ஸ்மார்ட்போன் மோகத்தில் இருந்து விடுதலை அளிப்பதற்காக என்றே சூப்பர் செயலி (ஆப்) அறிமுகமாகி இருக்கிறது. ஆப்டைம் எனும் அந்த செயலி, நீங்கள் விரும்பிய நேரத்தில் ஸ்மார்ட்போன் விடுதலை அளிக்கிறது. அதாவது ஸ்மார்ட்போனில் இருந்து விடுவித்து உங்களுக்காக ஓய்வுநேரத்தை அளிக்கிறது. இந்த நேரத்தில் வேலையிலோ ,குடும்பத்திலோ அல்லது நண்பர்களுடனோ கூடுதல் கவனம் செலுத்தலாம்.
இந்த செயலியை தரவிறக்கம் செய்தவுடன், எப்போது எல்லாம் ஸ்மார்ட்போனில் இருந்து விடுதலை அல்லது ஓய்வு தேவை என்று கருதுகிறீர்களோ அப்போது இந்த செயலியை ஆன் செய்தால் போதும் அதன் பிறகு குறிப்பிட்ட நேரத்திற்கு வரும் அழைப்புகள், நோடிபிகேஷன் போன்ற எல்லாவற்றையும் முடக்கிவிடும். நீங்கள் எந்த இடைஞ்சலும் இல்லாமல் வேலையில் கவனம் செலுத்தலாம். அல்லது உறவுகளுடன் உரையாடலாம்.
ஆனால் இதற்கு செயலி தேவையா? போனை கொஞ்ச நேரம் ஸ்விட்ச் ஆப் செய்தால் போச்சு என்று நினைக்கலாம். செய்யலாம் தான், இருப்பினும் இந்த பழைய உத்தியில் ( ஸ்விட்ச் ஆப் செய்வதையும் பிளைட் மோடில் வைப்பதையும் இப்படி தான் ஆப்டைம் கேலி செய்கிறது) உள்ள சிக்கல் என்ன என்றால் இடைப்பட்ட நேரத்தில் உங்களுக்கு முக்கிய அழைப்புகள் வந்தால் என்ன செய்வது? வேலையில் இருக்கும் வீட்டில் இருந்து அழைப்பு வந்தாலோ அல்லது வீட்டில் இருக்கும் போது அலுவலகத்தில் இருந்து முக்கிய அழைப்பு வந்தாலோ அவற்றை தவறவிடலாம் அல்லவா? ஆக, போனை ஸ்விட்ச் ஆப் செய்தாலும் முக்கிய அழைப்புகள் வந்திருக்குமோ என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கலாம்.
ஆப்டைம் இந்த பிரச்னையை அழகாக தீர்த்து வைக்கிறது. இதை இயக்கும் போதே யாருடைய அழைப்புகளுக்கு விதிவிலக்கு அளிக்கலாம் என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒரு மணி நேரம் ஸ்மார்ட்போன் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும் என தீர்மானித்து விட்டு வேலையை பார்க்க முடிவு செய்யும் போது, வீட்டில் இருந்து அழைப்பு வந்தால் மட்டும் அனுமதி அளிக்கலாம் என தெரிவிக்கலாம். மற்றபடி எல்லாவற்றையும் முடக்கி விடலாம்.
இப்படி முடக்கும் நேரத்தில் செயலி நம் சார்பாக பொறுப்பாக பதில் அளிக்கும் பணியையும் கவனித்துக்கொள்ளும். அழைப்புகள் அல்லது மெயில்களுக்கு, பின்னர் தொடர்பு கொள்ளப்படும் என்பது போல பதில் அளிக்கும். அதோடு, குறிப்பட்ட நேரம் முடிந்ததும் ,இடைப்பட்ட காலத்தில் எத்தனை அழைப்புகள் வந்தன, எத்தனை மெயில்கள், செய்திகள் வந்தன என்பதையும் விரிவாக அறிக்கை போல சமர்பித்துவிடும்.
இப்படி முடக்கும் நேரத்தில் செயலி நம் சார்பாக பொறுப்பாக பதில் அளிக்கும் பணியையும் கவனித்துக்கொள்ளும். அழைப்புகள் அல்லது மெயில்களுக்கு, பின்னர் தொடர்பு கொள்ளப்படும் என்பது போல பதில் அளிக்கும். அதோடு, குறிப்பட்ட நேரம் முடிந்ததும் ,இடைப்பட்ட காலத்தில் எத்தனை அழைப்புகள் வந்தன, எத்தனை மெயில்கள், செய்திகள் வந்தன என்பதையும் விரிவாக அறிக்கை போல சமர்பித்துவிடும்.
ஆக , இந்த செயலி ஸ்மார்ட்போனில் இருந்து தேவையான ஓய்வை பெற்றுத்தருவதோடு, இடைப்பட்ட நேரத்தில் எந்த தகவல் இழப்பும் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது. அதே போல இந்த செயலி ஒருவரது ஸ்மார்ட்போன் பயன்பாட்டையும் கவனித்து அது பற்றிய தகவல்களை அளிக்கிறது. எந்த நேரங்களில் எல்லாம் போனை பயன்படுத்திகிறீர்கள், எந்த செயலிகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன போன்ற விவரங்களுடன் விரிவான அறிக்கையை அளித்து, உங்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை உங்களுக்கு புரியவைக்கும். முடக்கப்பட்டிருக்கும் நேரத்திலும் கூட குறிப்பிட்ட எண்ணில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு வந்தால் அது முக்கியமானதாக இருக்கும் என புரிந்து கொண்டு அந்த எண்ணை மட்டும் அனுமதிக்கும் வகையில் புத்திசாலித்தனமாகவும் செயல்படும் . ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கண்காணித்து சொல்லும் செக்கி மற்றும் மொமெண்ட் போன்ற செயலிகள் அறிமுகமாகி இருக்கும் நிலையில் ஆப்டைம் அவற்றை எல்லாம் விட ஒருபடி மேலானதாக கருதப்படுகிறது. அறிமுகமான வேகத்திலேயே இணைய உலகில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஜெர்மனியின் பெர்லினை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்டெயின்ஹார்ட் எனும் உளவியல் வல்லுனர் இந்த செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலியின் நோக்கம் மற்றும் செயல்படும் விதம் பற்றி இதன் இணைவீட்டில் விரிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தில் கவனித்தாக வேண்டிய பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் பரப்பிலான உலகில் நான் மனிதர்களை விட ஸ்கீரின்களை (ஸ்மார்ட்போன்) தான் அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று குறிபிடப்பட்டு ஸ்மார்ட் போன்கள் நம் வாழ்வின் சிறந்த தருணங்களை பாழாக்க அனுமதிக்கலாமா ? என்று கேட்கப்பட்டுள்ளது.
இன்று அலுவலகம் என்பது எப்போதெல்லாம் லாக் இன் செய்கிறோமோ அப்போதெல்லாம் என்றாகிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் என்னும் நிலையில் வேலையில் இருந்து விடுபட முடியாத இக்கட்டை உண்டாக்கி , பணியிடத்தை வீடு வரை கொண்டு வந்துவிட்டது என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் நிச்சயம் ஸ்மார்ட்போன் பயனாளிகளை யோசிக்க வைக்கும். இதனால் தேவையில்லாத மன அழுத்தமும் அதிகமாகி வரும் நிலையில் எல்லோருக்கும் தேவைப்படுவது பணி-ஓய்வுக்கான சரியான சமன்தான் என்று தொடர்கிறது இந்த விளக்கம். எப்படி நாம் தேவையில்லாத நொறுக்குத்தீனிகளை உடகொள்ள பழகியிருக்கிறோமோ அதே போல இன்று நொறுக்குத்தகவல்கள் விரல் நுனியில் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன என்றும் குறிப்பிடுகிறது. இந்த பழக்கத்தை மாற்றுவதற்காக தான் நம்முடைய ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகம் பயன்பாட்டை அறிந்து கொண்டு தேவையான நேரத்தில் அவற்றில் இருந்து விடுபட வழி ஆப்டைம் வழி செய்வதாக பெருமையாக தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போனில் இருந்து கொஞ்சம் நேரம் பிடுங்கி கொள்வதன் மூலம் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் உங்கள் நேரம் மற்றும் கவனம் ஆகிய மதிப்பில்லாத பரிசை அளிக்கலாம் என்றும் ஊக்கம் அளிக்கிறது.
பெர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்பான ஆய்விலும் ஈடுபட்டிருப்பதால் எதிர்காலத்தில் மேலும் பல புதிய டிஜிட்டல் விடுதலை சேவைகளை அளிக்க உள்ளது.
ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆப்டைம் இணையதளம்; http://offtime.co/
ஆண்ட்ராய்டு போனில் பயன்படுத்த: https://play.google.com/store/apps/details?id=co.offtime.kit&hl=en
ஆண்ட்ராய்டு போனில் பயன்படுத்த: https://play.google.com/store/apps/details?id=co.offtime.kit&hl=en
No comments:
Post a Comment