திருப்பதி கோவில்
தரிசன டிக்கெட்: ஆந்திர தபால் நிலையங்களில் முன்பதிவு
திருப்பதியில்
ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்கள்
எளிதில் தரிசனம் செய்ய வசதியாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை
தேவஸ்தானம் செய்து உள்ளது.
ஆனால் ஆன்லைன் முன்பதிவு வசதியை நகர மக்கள் தான் அதிகம்
பயன்படுத்துகிறார்கள். கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்
முன்பதிவு தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்த திருமலை தேவஸ்தானம் திட்டமிட்டு
உள்ளது. இதற்காக தபால் நிலைய அதிகாரிகளுடன் தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்து உள்ளது.
நவம்பர் 1–ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
முதல் கட்டமாக ஆந்திரா முழுவதும் தபால் நிலையங்களில் தரிசன டிக்கெட் முன்பதிவு
தொடங்குகிறது. இது வெற்றி பெற்றால் நாடு முழுவதும் தபால் நிலையங்களில் இந்த
திட்டம் கொண்டு வரப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறினார்கள்.
S.அருள்செல்வன்
பட்டுகோட்டை.
No comments:
Post a Comment