ஆண்ட்ராய்டில் வருகிறது 10 இந்திய மொழிகள்..
டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் சுந்தர் பிச்சை
சிலிக்கான்வேலி:
கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் குஜராத்தி உள்ளிட்ட 10 இந்திய மொழிகள்
பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மோடி
தலைமையில் நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா நிகழ்ச்சியின்போது உறுதி அளித்தார்.
சிலிக்கான்வேலியில்
மோடி முன்னிலையில், உலகின் முன்னணி நிறுவன சி.இ.ஓக்கள் பங்கேற்ற டிஜிட்டல் இந்தியா
நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை பேசியதாவது:
மோடியுடன் ஒரே மேடையில்
நானும் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. டெக்னாலஜியை அடுத்த கட்டத்துக்கு
உயர்த்த வேண்டும் என்பதே இந்த கூட்டத்தின் நோக்கம். இந்தியாவுக்கு மட்டுமல்ல
உலகத்திற்கே இந்த நோக்கம் உள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்
போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 30 கோடி பேர் இணையத்தை
பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் 10ல் 9 ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு
இயங்குதளம்தான் உள்ளது. எனவே அடுத்த மாதத்திற்குள், மோடியின் தாய்மொழியான
குஜராத்தி உள்ளிட்ட 10 இந்திய மொழிகளில் இயங்கும் அளவுக்கு, ஆண்ட்ராய்டு
இயங்குதளம் மேம்படுத்தப்படும்.
இந்தியாவில் யூடியூப்
சமூகத்தை இணைக்கும்காரணியாக உள்ளது. இந்தியாவில் அதிகம் பாலோவர்களை கொண்ட ஒரு
பெண், இந்தியில் சைவ உணவுகள் குறித்த குறிப்புகளை போடுபவர்தான். அந்த அளவுக்கு
அன்றாட வாழ்க்கையில் இணையத்தை இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவிற்கு கடந்த
ஆண்டு சென்றிருந்தேன். அங்கு தொழில்முதலீட்டுக்கு வாய்ப்பு கூடியுள்ளதை
பார்த்தேன். இந்திய தொழிலதிபர்கள் தொழில்குறித்து அதிக அக்கறை காட்டுகிறார்கள்.
பிளிப்கார்ட், குயிக்கர், ஸ்னாப்டீல் போன்றவை சமீபத்தில் இந்தியாவில் தொழில்
தொடங்கி வெற்றி பெற்றுள்ளன. பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா
திட்டத்தில் கூகுளும் பங்கேற்கும். இவ்வாறு சுந்தர் பிச்சை பேசினார்.
No comments:
Post a Comment