dob

From January 2015, life-saving drugs to show govt-fixed rates in bold red
உயிர்காக்கும் மருந்துகளுக்கு நாடு முழுவதும் ஒரே விலை: அரசு அதிரடி!
 All life saving drugs from January 2015 will come with a bold red strip on their packs highlighting price as fixed by the government and also specify if they are under price control. Signaling a New Year gift for consumers, the government is set to make it mandatory for regulated drugs to print on their packs 'DPCO Scheduled Drug' in black ink on a bold red strip along with their ceiling price per unit, an official source said.

The move will enable consumers, who are presently highly dependent on doctors and chemists, to make an informed choice while purchasing medicines
. In case of overcharging, consumers can directly call National Pharmaceutical Pricing Authority's (NPPA) helpline number 1800111255 or voice helpline 1800114424 to lodge a complaint.

"The proposal has been discussed with the ministry of consumer affairs, food and public distribution and health ministry. There is overall consensus that there is a need to protect consumer interest in the use of medicines," the official said. The NPPA, which regulates and monitors prices of medicines, is anchoring the move.

This is the second such populist move related to medicines proposed in the past one week. The government also proposed to bring at least 100 more drugs under price control by making corrections in the existing Drug Price Control Order, 2013.
வருகிற ஜனவரி மாதம் முதல் உயிர் காக்கும் மருந்துகளை நாடு முழுவதிலும் ஒரே விலையில் விற்கவும், அந்த விலையை பெரிதாக தெரியும் வகையில் சிவப்பு கலரில்  அச்சிட வைக்கவும் அரசு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

இதுதொடர்பான உத்தரவு வரும் டிசம்பர் மாத இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயிர்காக்கும் மருந்துகள் தற்போது இந்தியாவில் அந்தந்த பகுதிகளில் தனித் தனி விலையில் விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் சொல்லும் மருந்துக் கடைகளில்தான் நோயாளிகள் மருந்துகளை வாங்க வேண்டியுள்ளது. இதனால் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விலை வைத்து விற்கப்படுகிறது.

இதனைத் தடுப்பது குறித்து மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்தது. அதன்படி இந்தியா முழுமைக்கும் ஒரே விலையில் உயிர் காக்கும் மருந்து பொருட்களை விற்க மருந்து கம்பெனிகள், விற்பனை டீலர்கள், விற்பனை சங்கத்தினர் ஆகியோருக்கு உரிய உத்தரவை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது.

இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்புத்துறை,உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் சுகாதாரத் துறை ஆகிய துறைகள் தீவிர நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் மூலம் உயிர்க் காக்கும் மருந்துகள் விலை ஒரே கட்டுப்பாட்டில் குறைந்த  விலையில் நுகர்வோர் வாங்க ஏதுவாகும்.

மாறிய விலைகளில் விற்கப்படும் மருந்துகள் மூலம் இதுவரை 4,000 கோடி ரூபாய் வரை கூடுதலாக  நுகர்வோரிடம் இருந்து  வசூலிக்கப்பட்டிருப்பதாக தேசிய மருந்துகள் விலை ஆணையம் தெரிவித்துள்ளது.இதனால் இந்த விலைக் கட்டுப்பாடு அவசியமாகி உள்ளது. இதன் மூலம் எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளின் விலை வெகுவாகக் குறையும்.

இந்த விலைக்கட்டுப்பாடு வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் புத்தாண்டு பரிசாக மத்தியஅரசு அளிக்கும் என்று  கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மருந்துக் கம்பெனிகள், டீலர்கள்,நுகர்வோர் அமைப்புகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் மருந்து கம்பெனிகள் தங்களின் கருத்துக்களை சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சுகாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

S.Arul selvan , Divisional Secretary,NAPE Gr C,Pattukottai.  



Kendriya Vidyalaya to drop German language course over Sanskrit

Kendriya Vidyalaya board has decided to discontinue teaching German language courses in the KV schools in the middle of the academic year, across the country. The decision is likely to affect thousands of students of class 6th to class 8th in 500 KV schools. Schools had completed their second term and summative and one formative assessment. The academic year 2014-15 will end in March 2015. The decision of dropping the German language has been taken in a meeting, which was held on October 27, 2014, which was chaired by HRD Minister Smriti Irani. It is apparently aimed at restoring the primacy of the three-language formula under which English and two modern Indian languages are taught. A notification regarding changes has been sent to all KV's, as it says, "teaching of the German language as an option to Sanskrit will be discontinued forthwith. Students studying German as an option to Sanskrit in Class 6 to 8 shall be given the option to study Sanskrit or any other modern Indian language of his or her choice." It also said that the students aspiring to study German, they can study as an additional subject or hobby but not as a third language. N R Murali, deputy commissioner of the KV Sangathan regional office in Kolkata, said, "The idea is that a foreign language replacing a modern Indian language is in violation of the national policy on education or the National Curriculum Framework (NCF) or the three language formula. The decision has been communicated to the schools." Earlier, the Kvs in metro cities were asked to offer foreign language by the HRD Ministry. Those KVs that had been offering German as a third language had been doing it under a MoU signed with the Goethe Institute, which provided training to teachers and library material and organized cultural programs.


Facebook launches video tool

In a bid to push more users to share videos, the social networking site has launched a personalised video creation tool.
The "Say Thanks", tool lets users put together personalised video cards combining preset themes and their own posts and photos.
This allows users to make shareable, customised videos to post on theirs and their friend's timelines.
To create the video, visit facebook.com/thanks, select a friend for Facebook to generate a preview of the video.
"You will have the ability to select a different theme and edit photos and posts that represent your friendship," explained a blog post by Facebook.
After users finish making their video, they have an option of adding a personalised message before posting it to their own timeline, and tagging their friend.
The service is available on desktop and mobile in English, French, German, Indonesian, Italian, Portuguese, Spanish and Turkish.


பாஸ்போர்ட் வாங்க இனி ஆதார் அட்டை கட்டாயம்!'
பாஸ்போர்ட் வாங்க ஆதார் அட்டையை  முக்கிய ஆவணமாகக் கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், ஆதார் அட்டை பெறுவது கட்டாயம் ஆகி உள்ளது.

புதியதாக பாஸ்போர்ட் வழங்குவது, புதுப்பிப்பது  உள்ளிட்ட  பணியை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்து வருகிறது. இதில், புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு குடும்ப அட்டை மற்றும் இருப்பிடச்  சான்றிதழுடன் கூடிய 2 அடையாள அட்டைகள், வயது சான்றிதழ் ஆகியவை அவசியம். இதில் வயது சான்றிதழுக்காக பள்ளி கல்வித்துறை வழங்கும் இடமாற்றுச் சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அடுத்ததாக குற்றப்பின்னணி ஏதவாது உள்ளதா என்பது பற்றிய  காவல்துறையின்  அறிக்கையையும் சமர்பிக்க வேண்டும். இதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்ததும் பாஸ்போர்ட் அலுவலகமே சம்மந்தப்பட்ட காவல்துறை  அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும்.

இதில் காலதாமதம் அதிக அளவில் ஏற்படுகிறது என்பதை அறிந்த  வெளியுறவுத்துறை அமைச்சகம், ஒரு புதிய முடிவை மேற்கொண்டுள்ளது.  அதன்படி, முந்தைய அரசு அறிமுகப்படுத்திய ஆதார் அட்டை திட்டத்தில் இவை மூன்றும் ஒரே சான்றிதழாக இடம் பெற்றுள்ளன. எனவே ஆதார் அட்டை அடிப்படையிலேயே இனி பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதி மன்றம் ஒரு வழக்கில், ஆதார் அட்டையை அரசின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்  என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று,வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள், உள்துறை அமைச்சகம், சட்டம் மற்றும் உளவுதுறை ஆகியவற்றுடன் தீவிர  ஆலோசனை நடத்தினார்கள். இறுதியில், ஆதார் அட்டை பாஸ்போர்ட் எடுக்க அவசியம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பாஸ்போர்ட் பெற ஆதார் அட்டையும்  ஏற்றுக் கொள்ளப்படுகிறது. விரைவில் ஆதார் அட்டை அவசியம் என உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதே போல் குற்றப்பின்னணி தகவல்களையும் எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய குற்ற ஆவண காப்பகம், நாடு முழுவதற்குமான குற்ற தகவல்களை கணினி மயமாக்கி வருகிறது. இன்னும் 2 மாதத்தில் இது முடிந்து விடும். அதில் குற்ற விவரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களில் இருந்தும் தெரிந்து கொள்ள வசதி செய்யப்படும்.

இதனால்  பாஸ்போர்ட் விண்ணப்பித்தவுடன், விண்ணப்பதாரரின் தகவல்களை ஏற்று காவல்துறை விசாரணை இல்லாமலேயே பாஸ்போர்ட் விரைவில் கிடைக்க வழிவகை ஏற்படும்.