dob

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு: 7வது ஊதியக் குழு பரிந்துரை!

 http://finmin.nic.in/7cpc/7cpc_report_eng.pdf

HIGHLIGHTS OF 7TH CPC REPORT -FLASH NEWS FROM NDTV



MINIMUM BASIC PAY START AT 18000 MAXIMUM 2.25 LAKHS

OVERALL INCREASE IN PAY  ALLOWANCES AND PENSION TO BE 23.55%

52 ALLOWANCES ABOLISHED 

RISK AND HARDSHIP ALLOWANCE INTRODUCED
     மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என 7வது ஊதியக்குழு பரிந்துரை செய்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் சம்பளக் கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் இன்று (19-ம் தேதி) தனது 900 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், ''மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். அதேபோல், ஆண்டிற்கு 3 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக 18 ஆயிரம் வழங்க வேண்டும், வீட்டு வசதி கடன் ரூ.25 லட்சம் வழங்கலாம் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

மேலும், இந்த பரிந்துரைகளை வரும் ஜனவரி மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ''7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்ய செலவினங்களுக்கான தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

No comments:

Post a Comment