‘ஸ்மார்ட் போன்’ துணையுடன் உறங்கும் 74% இந்தியர்கள்!
Smartphones new sleeping partners in India
More Indians are sleeping with smartphones in their hands, a survey has found.
This is among the results of a seven-country survey of more than 7,000 people about smartphone habits released on Tuesday by Motorola, now owned by Chinese electronics giant Lenovo, phys.org reported.
Sixty percent of those surveyed said they slept holding their handsets – with the highest percentages in India (74 percent) and China (70 percent).
One in six smartphone users said they used their phones while showering, and 54 percent said they would reach for the smartphone before saving their cat in a fire.
Around 40 percent tell secrets to their phones they would not reveal even to their best friend.
But the relationship is not perfect. Only 39 percent said they were “happy” with their smartphone, and 79 percent felt bothered that their devices interrupted them at inopportune moments.
The survey was conducted online by KRC research with a total of 7,112 smartphone owners in the United States, Britain, Brazil, China, Spain, Mexico and India.
நவீன செல்லிடப்பேசிகளான "ஸ்மார்ட் போன்'களை படுக்கைத் துணையாகக் கொண்டு உறங்குவதாக அண்மையில் மேற்கொள்ளபட்ட ஓரு சர்வதேச ஆய்வில் 74 சதவீத இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், சீனா, ஸ்பெயின், மெக்ஸிகோ ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரிடம் "கே.ஆர்.சி. ரிஸர்ச்' ஆய்வு நிறுவனம் அண்மையில் இணைய வழி ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் 7,112 பேர் கலந்து கொண்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 7 நாடுகளையும் சேர்ந்த ஸ்மார்ட் போன் உபயோகிப்பாளர்களில் 60 சதவீதம் பேர், படுக்கையில் ஸ்மார்ட் போனை கையில் வைத்துக் கொண்டே தூங்குவதாக ஒப்புக் கொண்டனர்.
இந்தியர்களில் மட்டும் 74 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன் துணையுடன் தூங்குவதாகத் தெரிவித்தனர்.
அவர்களுக்கு அடுத்தபடியாக 70 சதவீத சீனர்கள் அவ்வாறு தூங்குவதாகக் கூறினர். ஆய்வில் பங்கேற்றவர்களில் 57 பேர், கழிப்பறைக்குச் செல்லும்போதும் தாங்கள் ஸ்மார்ட் போனை எடுத்துச் செல்வதாகத் தெரிவித்தனர்.
அவ்வாறு கழிப்பறையிலும் ஸ்மார்ட் போனை விட்டுப் பிரிவதில்லை என 41 இந்தியர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
குளிக்கும்போது கூட ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தியதாக 22 சதவீத இந்தியர்கள் கூறியுள்ளனர்.
68 சதவீத இந்தியர்கள், தீவிபத்து நேரிட்டால் ஸ்மார்ட் போனைத்தான் முதலில் காப்பாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, வார விடுமுறைகளில் முக்கியமானவர்களை சந்திக்காமல் கூட இருந்து விடுவோம் (15 சதவீதத்தினர்), குளிக்காமல் (18 சதவீதத்தினர்), உறங்காமல் (19 சதவீதத்தினர்)கூட இருந்துவிடுவோம், ஆனால் ஸ்மார்ட் போன் இல்லாமல் வெளியே போகமாட்டோம் என ஆய்வில் பங்கேற்றவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.