dob

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல; பயணிப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்!
Image result for helmet wearing
ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல; பயணிப்பவரும் ஹெல்மட் அணியாவிட்டால்  ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்றும்ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டுபவர்களின் லைசென்ஸை பறிமுதல் செய்ய பரிந்துரைத்தும் சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 8 ஆம் தேதியன்று பரபரப்பு உத்தரவை பிறப்பித்தது.
சாலைகளில் நேரும் விபத்துகளின் போது அதிக அளவிலான உயிரிழப்புகள், ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளால்தான் நிகழ்கிறது என்பதால் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது.

மேலும், இருசக்கர வாகனங்கள் ஓட்டும் நபர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால், அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்றும், ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல பயணிப்பவரும் ஹெல்மெட் அணியாவிட்டால்  ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (17.06.15) விடுத்துள்ள செய்தி குறிப்பில், "01.07.2015 முதல் இரு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர் தலைக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். தவறும் பட்சத்தில், மோட்டார் வாகனச் சட்டம் - 1988,  பிரிவு 206-இல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, சம்மந்தப்பட்ட  இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநரின் உரிமம் ஆகியவை 
பறிமுதல் செய்யப்படும்.  

இந்திய தர நிர்ணய சான்று பெற்ற புதிய தலைக்கவசம் மற்றும் அதனை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை காண்பித்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் விடுவிக்கப்படும் என இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment